நல்லிணக்கத்துக்கான முரளி கிண்ண கிறிக்கெற் போட்டி – 2013 கிளிநொச்சியில் மாங்குளத்தில் கடந்த 01 ஆம் திகதி ஆரம்பம் ஆனபோது இடம்பெற்ற சில சுவாரஷியங்களை காட்டக் கூடிய பதிவு இது.
இலங்கை கிறிக்கெற் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார உட்பட்ட பேராளர்களுக்கு தமிழ் பாரம்பரிய நடனம் மூலம் வரவேற்பு வழங்கப்பட்டது.
குமார் சங்ககரா அடங்கலாக கிறிக்கெற் நட்சத்திரங்களை பெண் வீராங்கனைகள் மொய்த்து நின்று ஆட்டோகிராப் வாங்கினார்கள்.
பெண் வீராங்கனைகள் மிகுந்த உற்சாகம், உத்வேகம் ஆகியவற்றுடன் போட்டியில் கலக்கினார்கள்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில்
கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும் இளைஞர்களை கிரிக்கெட்டின்
பக்கம் ஈர்க்கும் முயற்சியாகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையின்
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பெயரில்
தொடங்கப்பட்ட முரளி ஹார்மனி கப் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இம்முறையும்
முன்னார் போர் வலயங்களான வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நடந்துள்ளன.
நவம்பர் 1-ம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் வடக்கு கிழக்கு
பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்தும் தென்னிலங்கையில்
கிரிக்கெட்டில் பிரபலமான முக்கிய சில பாடசாலைகளிலிருந்துமாக 16 கிரிக்கெட்
அணிகள் மோதின.
இறுதிப்போட்டி கண்டி ட்ரினிட்டி கல்லூரி அணிக்கும் கொழும்பு சென்.
பீட்டர்ஸ் கல்லூரி அணிக்கும் இடையில் நாளை செவ்வாய்க் கிழமை (நவம்பர் -5-ம்
திகதி) நடக்கிறது. வடக்கிலங்கையின் முன்னாள் போர்ப் பிரதேசங்களான
யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான், மாங்குளம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு
உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள 5 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடந்தன.
19 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு அணிகளும் 23 வயதின் கீழ் பெண்கள் பிரிவு அணிகளுமாக 20 அணிகள் முரளி ஹார்மனி கப் போட்டியில் விளையாடின.
முன்னாள் போர் வலயப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் பள்ளி மாணவர்களிடையே இந்த
முரளி ஹார்மனி கப் சுற்றுப்போட்டி எந்தளவுக்கு கிரிக்கெட் ஆர்வத்தையும்
ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று இந்தச் சுற்றுப்போட்டிகளுக்கான
முல்லைத்தீவு மாவட்ட அணிக்கான பயிற்றுவிப்பாளர் மகாராஜா கஜதீபனிடம்
பிபிசி தமிழோசை வினவியது.
கடந்த போர்க்காலங்களில் வடக்கு கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு எட்டாதிருந்த கிரிக்கெட் வாய்ப்புகள் இப்போது கிடைக்கத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார். இலங்கை கிரிக்கெட் சபையின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களில் கிரிக்கெட் மைதானங்கள் சீரமைக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கு சம்பளம் கொடுத்து ஊக்குவிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
/ilakkiyainfo.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக