சென்னை:இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள்
மாநாட்டில், இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என,
மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதி விடுத்த எச்சரிக்கையைத்
தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்த, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் மூலம்,
பிரதமர் எடுத்த முயற்சி பலிக்கவில்லை; தோல்வியில் முடிந்தது.
"தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், மத்திய அரசுக்கு, வெளியலிருந்து அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெறவேண்டியிருக்கும்' என, சிதம்பரத்திடம் கருணாநிதி தெரிவித்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கையில், இம்மாதம், 15 17 தேதிகளில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. "இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து, போர்க்குற்றம் புரிந்து, மனித உரிமைகளை மீறிய, இலங்கையில் நடக்கும் இம்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்க மறுக்கும் இலங்கையை, காமன்வெல்த் அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன. தமிழக சட்டசபையில், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், முதல்வர் ஜெயலலிதா, இதற்கான தீர்மானத்தையும், சமீபத்தில் நிறைவேற்றியுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர், "தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, கூறியுள்ளனர். இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து, தனது கோரிக்கையை, வாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், மத்திய அமைச்சர், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர்,
போன்றோர், "காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க வேண்டும்' என, கூறுகின்றனர். காங்கிரசில் நிலவுகிற குளறுபடிகளுக்கு இடையே, "காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர், மன்மோகன் பங்கேற்கிறார்' என, இரு தினங்களுக்கு முன், செய்திகள் வெளியாயின.
இந்த தகவலால், கோபமடைந்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, "தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, எச்சரித்தார். "காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் பங்கேற்றால், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து, தி.மு.க., அளித்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும்' என்ற அர்த்தத்தில், கருணாநிதியின் இந்த எச்சரிக்கை அமைந்திருந்தது. இதையடுத்து, கருணாநிதியை சமாதானப்படுத்த, மத்திய அரசின் தூதுவராக, நிதி அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை நேற்று சந்தித்தார். கோபாலபுர இல்லத்தில், நேற்று காலை, 10:30 மணி முதல், 11:00 மணி வரை, இந்த சந்திப்பு நடந்தது.அப்போது, காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பங்கேற்க வேண்டிய அவசியத்தை,பிரதமரின் தரப்பு வாதமாக, கருணாநிதியிடம், சிதம்பரம் எடுத்துரைத்துள்ளார். அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கும், 13வது அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்றுதல், போரில் இடம் பெயர்ந்தவர்களை, மறு குடியமர்வு செய்வது போன்ற முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக, இலங்கை அரசை, இந்தியா நிர்பந்திக்க, காமன்வெல்த் மாநாட்டை, பிரதமர் பயன்படுத்துவார்.எனவே, "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது' என்ற கோரிக்கையை, தி.மு.க., மேலும் வலியுறுத்தக் கூடாது என, கருணாநிதியை, சிதம்பரம் கேட்டுக் கொண்டதாக, தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஆனால், மத்திய அரசின் சமரசத்தை ஏற்க, கருணாநிதி மறுத்துவிட்டார். இலங்கைத் தமிழர் தொடர்பாக, இதற்கு முன் இலங்கை அளித்த வாக்குறுதிகள் எதுவும், அந்நாட்டு, ராஜபக்சே அரசால் நிறைவேற்றப்படவில்லை. இருந்தும், இலங்கையை அனுசரிக்கும் போக்கையே, மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்கையில், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், இலங்கைக்கு, மேலும் சாதகமாக நடந்துகொள்ளும் நிலையே ஏற்படும். இதனால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையிலிருந்து, பின் வாங்கமாட்டோம் என, சிதம்பரத்திடம் கருணாநிதி திட்டவட்டமாகக் கூறி விட்டதாகவும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன் நிலையில், தி.மு.க., உறுதியாக இருப்பதால், மத்திய அரசு மேற்கொண்ட சமாதான முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவும், அதன் சமரச திட்டம் பலிக்கவில்லை எனவும் தெரிகிறது. கருணாநிதியை சந்தித்து திரும்பிய சிதம்பரம் தெரிவித்த கருத்தும், தமிழகத்தின் கோரிக்கையை ஆதரிப்பது போன்றேஇருந்தது.
கருணாநிதி வீடு முன், அமைச்சர், சிதம்பரம் அளித்த பேட்டி:காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் பங்கேற்கப் போகிறார் என்றும், உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், அதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகளில் உண்மையில்லை; மாநாட்டில் பங்கேற்பது குறித்து, மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என, தமிழக காங்கிரஸ் அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். என் கருத்தையும், .உரியவர்களிடம்கூறியுள்ளேன். இதையெல்லாம், கருத்தில் கொண்டு, மத்திய அரசு முடிவெடுக்கும். விடுதலைப் புலிகள் இயக்க பிரசார பாடகர் இசைப் பிரியா, இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோக காட்சிகளை பார்த்தேன். இசைப் பிரியாவை கொன்றது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதற்கு, பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசு தொடர்ந்து, மனித உரிமை மீறலை செய்து வருகிறது. இதை, தொடக்கத்திலிருந்தே கண்டித்து வருகிறோம். இலங்கை அரசு, தான்தோன்றித்தனமான செயல்பட்டு வருவதை ஏற்கமுடியாது.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக