வெள்ளி, 8 நவம்பர், 2013

விஜயகாந்த் ஏற்காட்டை விட்டு டெல்லி சட்டசபை தேர்தலில் கவனம் ! அப்படியே அவரது வடநாட்டு ஹீரோயின்களையும் பாத்துட்டு வரலாம்லே ?

தமிழக அரசியல் வட்டாரத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஏற்காடு இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த விஜயகாந்த், முடிவெடுப்பதற்கு முன், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, ஏற்காடு தொகுதிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள், அங்கு சென்று, நிலைமையை ஆராய்ந்து, விஜயகாந்த்துக்கு தெரிவித்து உள்ளனர்."ஏற்காட்டில் ஆளும் கட்சி சார்பில், அமைச்சர்கள் உள்ளிட்ட, 62 பேர் அடங்கிய பெரும் படை, களம் இறங்கியுள்ளது. தி.மு.க., சார்பிலும், அதற்கு சமமாக, நிர்வாகிகள் வந்து குவிந்துள்ளனர். தேர்தல் பணிகளை, இரு கட்சிகளும் மிக சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கின்றன. அதிகார பலம், பண பலம், ஆள் பலம் ஆகியவற்றை, தே.மு.தி.க.,வால் எதிர்கொள்ள முடியாது.
எனவே, ஏற்காட்டை புறக்கணித்து விடுவதே நல்லது; அதற்கு பதிலாக, டில்லி தேர்தலில் நாம் தீவிரம் காட்டலாம்' என, விஜயகாந்த்துக்கு யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர் தனது முடிவை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், டில்லியில் வாழும், 15 லட்சம் தமிழர்களை நம்பி, அம்மாநில தேர்தல் களத்தில் தே.மு.தி.க., முதன்முதலாக, காலடி எடுத்து வைத்துள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதை ஆராய்ந்து, அம்மாநில நிர்வாகிகள், ஒரு பட்டியலை, விஜயகாந்திடம் அளித்து உள்ளனர்.

அதுபற்றி, டில்லி மாநில தே.மு.தி.க., அமைப்பாளர் கே.கணேஷ் கூறியதாவது:கடந்த மாதம், 26ம் தேதி டில்லி வந்திருந்த விஜயகாந்த், இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அப்போது, இதுகுறித்து தான் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். எந்தவித அடிப்படை வசதியும் இன்றி, நீண்ட காலமாக, தலைநகரில் தமிழர்கள் படும் அவஸ்தைகளை எடுத்துக் கூறினோம்."ஒவ்வொரு ஆட்சியிலும், தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர். அவர்களுக்கான, அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கவில்லை. இந்த பிரச்னைகளை எல்லாம் அறிந்ததும், டில்லி தேர்தலில் தே.மு.தி.க., கண்டிப்பாக போட்டியிட வேண்டும்' என, அவர் முடிவு எடுத்தார். அதன்படி, ஒவ்வொரு பகுதியாக சென்று, தமிழ் மக்களை சந்தித்துப் பேசினோம். அதனடிப்படையில், 20 தொகுதிகளை தேர்ந்தெடுத்து, விஜயகாந்த்திடம் பரிந்துரைத்துள்ளோம். அவர் முதல் கட்டமாக, ஐந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளார். குறைந்தது, 10 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்பது எங்களது விருப்பம். எத்தனை தொகுதிகள் என்பதை, விஜய்காந்த் முடிவு செய்வார்.இவ்வாறு, கணேஷ் கூறினார்.

இந்நிலையில், தே.மு.தி.க., வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் படி, ஏற்காடு இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டு, டில்லி தேர்தல் பணியில் தீவிரம் காட்டும் முடிவுக்கு விஜயகாந்த் வந்து விட்டார் என, தெரியவந்துள்ளது. அதற்கு அச்சாரமாக, இரண்டாவது பட்டியலையும் நேற்று வெளியிட்டு விட்டார். இதன் பிறகு, தேர்தல் பிரசாரத்திற்காக, அவர் டில்லி செல்கிறார். டில்லியில், தமிழர் வாழும் பகுதிகளை சுற்றி வந்து, அவர் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.


ஏற்காடு இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டு, டில்லி மாநில சட்டசபை தேர்தலில் தீவிர கவனம் செலுத்தலாம் என்ற, முடிவில் தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் இருப்பதாக, அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது. அதன் காரணமாக, டில்லியில், தமிழர்கள் வாழும், 20 தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ள தே.மு.தி.க., அதில், முதல்கட்டமாக, நேற்று முன்தினம், ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. நேற்று, இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது.
இரண்டாவது பட்டியல்:

டில்லி சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் மேலும் ஆறு தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன் விவரம்:எம்.எஸ்.சுப்பிரமணியன் (டி.ஆர்.ஐ., நகர் தொகுதி), சர்மிளா (மாள்வியா நகர்), ரத்தினம் (பாலம்), பிரகாஷ் (ஆர்.கே.புரம்), தானப்பன் (ராஜேந்திரநகர்), செங்கோட்டையன் (ரோகினி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

--நமது சிறப்பு நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை: