உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் தனஞ்செய்
சிங். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவரான இவரது டெல்லி வீட்டில் வேலை
பார்த்துக்கொண்டிருந்த ராக்கி என்ற இளம் பெண் ஒருவர் இன்று காலை மர்மமான
முறையில் மரணம் அடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலில்
காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக எம்.பி. தனஞ்செய் சிங்கின் மனைவி ஜக்ரிதியை போலீசார் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி ஆகிய
பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வீட்டில் வேலை
பார்த்துக்கொண்டிருக்கும் மற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
எம்.பி-யின் வீட்டில் வேலை பார்த்த அந்த இளம் பெண்ணை கடந்த 10 மாதங்களாக
ஜக்ரிதி சிங் கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணின்
கைகள், கால்கள் மற்றும் மார்பில் காயங்கள் இருப்பதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகே, இவ்விஷயத்தில் முறைப்படியான நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த கொலை குறித்த சாட்சியங்களை மறைக்கவும், மனைவி பிரிந்து இருப்பதாக பொய் கூறியதாகவும் எம்.பி. தனஞ்செய் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எம்.பி. தனஞ்செய் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக