சனி, 9 நவம்பர், 2013

BJP: ஜே.பி.சி. அளித்த 2ஜி விசாரணை அறிக்கையை நிராகரிக்க வேண்டும்:


ஜே.பி.சி. அளித்த 2ஜி விசாரணை அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: சபாநாயகருக்கு பா.ஜனதா கடிதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி.) அறிக்கையை சபாநாயகர் மீரா குமார் நிராகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 2ஜி ஊழல் தொடர்பாக ஜே.பி.சி. இறுதி அறிக்கையில் விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டிருப்பதாகவும், தாங்கள் அனுப்பிய அதிருப்தி குறிப்பு நீக்கப்பட்டிருப்பதால் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் குறிப்பட்டுள்ளார். நாங்கள் அனுப்பிய அதிருப்தி குறிப்பில் பாராளுமன்ற விதிகளுக்கு மாறாக, பொருத்தமற்ற கருத்துக்கள் எதுவும் தங்கள் இடம்பெறவில்லை. அப்படியிருக்கும்போது, கருத்துக்களை நீக்க தலைவருக்கு உரிமை இல்லை. இப்பிரச்சினையில் சபாநாயகர் கவனம் செலுத்தி, நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சின்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: