வியாழன், 7 நவம்பர், 2013

வைகோ : இனி அதிமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி சேரமாட்டேன் ! முன்பும் நானாக அதிமுகவுடன் கூட்டணி சேரவில்லை ! அட்ரா சக்கை அப்படி போடு !

சென்னை: ''அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து பட்டது போதும்; இனிமேல், அக்கட்சியுடன் கூட்டணி சேர மாட்டோம்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.
ம.தி.மு.க., அலுவலகத்தில், நேற்று புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்ததை வரவேற்று வைகோ பேசியதாவது: அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள். அ.தி.மு.க.,வுடன் இனிமேல் கூட்டணி சேர மாட்டோம். இதற்கு முன் கூட்டணி சேர்ந்தபோது, நான் முடிவெடுத்து சேரவில்லை. என்னுடன் இருந்தவர்கள் தான், 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேரவேண்டும்' என, வற்புறுத்தினர். அவர்களின் விருப்பத்தால் தான், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தோம். ஆனால், கூட்டணிக்கு என்னை நிர்ப்பந்தித்தவர்கள் இப்போது, ம.தி.மு.க.,வில் இல்லை. அதில் பலர் தி.மு.க.,வுக்கும், சிலர் அ.தி.மு.க.,வுக்கும் சென்றுவிட்டனர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து, கடந்த சட்டசபை தேர்தலில் பட்டதுபோதும்; இனிமேல், அக்கட்சியுடன் கூட்டணிஇல்லை. இந்த ஒன்னும் தெரியாத பாப்பா சினிமாவுக்கு போயிருந்தா சிவாஜிக்கு அடுத்த இடம் இவருக்குதான்
மதுவிலக்கை வலியுறுத்தி நான் நடைபயணம் சென்றபோது, அவ்வழியாக வந்த முதல்வர் ஜெயலலிதா என்னை சந்தித்தார். 'இது முன்கூட்டியே ஏற்பாடு செய்து நடந்த சந்திப்பு; இதன்மூலம், ம.தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்படப்போகிறது' என, சொல்லுகின்றனர்.

வளைக்கவில்லை:

ஆனால், இச்சந்திப்பு தற்செயலாக நடந்த சந்திப்பே. ஜெயலலிதாவை சந்தித்தபோது, நான் அ.தி.மு.க., அமைச்சர்களைப் போல முதுகை வளைக்கவில்லை. வெயிலுக்கு தலையில் கட்டியிருந்த துண்டை கழட்டவில்லை. 'சூரிய ஒளியை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது' என, மருத்துவர்கள் சொன்னதால், கறுப்பு கண்ணாடி அணிந்துள்ளேன். அதை அணிந்து கொண்டு ஒருவரிடம் பேசுவது நாகரீகம் இல்லை. எனவே, கறுப்பு கண்ணாடியைக் கழட்டி விட்டு, ஜெயலலிதாவிடம் பேசினேன்.

பாராட்டினர்:

ஜெயலலிதாவிடம் நான் வளையாமல் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து, வெளிநாட்டிலில் இருந்தெல்லாம் என்னைப் பாராட்டினர். எனக்கு, பதவி முக்கியமில்லை. 'வாஜ்பாய் அரசில், எனக்கு கேபினேட் அமைச்சர் பதவி தருகிறேன்' என, இருமுறை கூறினர்; நான் மறுத்துவிட்டேன். இவ்வாறு, வைகோ பேசினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: