புதன், 3 ஏப்ரல், 2013

சென்னை / தூத்துக்குடி துறைமுகத்திற்கு NO கொச்சி துறைமுகத்திற்கு Ok.இலங்கை துறைமுக சங்கம்

தமிழகத்திற்கு சுற்றுலா வந்த இலங்கை பயணிகளும், புத்த துறவிகளும் சமீபத்தில் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து, இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கத்தினர் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதையடுத்து, “தமிழகத்திலிருந்து வரும் சரக்குகளை கையாளப் போவதில்லை” எனவும் துறைமுக தொழிலாளர் சங்க நிர்வாகி மகேஷ் சமரவிக்ரமா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவர் சார்ந்த தொழிற்சங்கம், மகிந்த ராஜபக்ஷேவின் ஆளும் கட்சி ஆதரவு சங்கம்.
எனினும் இது தொடர்பாக, இலங்கை துறைமுக பொறுப்பு கழகத்திடமிருந்து முறையான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. துறைமுக அதிகாரி நளின் அபோன்சோ, துறைமுக தொழிலாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பு குறித்து கொழும்பு துறைமுக நிர்வாகத்திடம் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடந்த ஆண்டு வந்த 4.1 மில்லியன் சரக்கு கன்டெயினர்களில் ஏறத்தாழ 70% தென் இந்திய துறைமுகங்களில் இருந்து வந்தவை.
இவை முக்கியமாக 3 தென்னிந்திய துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கு வந்தன. சென்னை, தூத்துக்குடி, கொச்சின் ஆகியவையே அந்த துறைமுகங்கள்.
இலங்கைக்கு வரும் 70 சதவீத சரக்கு இறக்குமதியை தடுத்து நிறுத்துவது சாத்தியமா?
துறைமுக நிர்வாக தரப்பிடம் இது தொடர்பாக விசாரித்தபோது, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், “சென்னை, மற்றும் தூத்துக்குடியில் இருந்து வரும் சரக்குகளை கையாளாமல், கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரும் சரக்குகளை மட்டும் இலங்கை துறைமுக தொழிலாளர்கள் கையாள திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இது நடந்தால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கொச்சின் துறைமுகம் ஊடாக அனுப்ப வேண்டிய நிலை ஏற்படலாம்.
சர்வதேச கிழக்கு – மேற்கு பிரதான கடல் பாதையில் இருந்து (main East-West shipping route) கொழும்பு துறைமுகம் இருக்கும் அதே தொலைவில்தான் கொச்சின் துறைமுகமும் உள்ளது. இது சுமார் 76 கடல் மைல்கள் (nautical miles) என்பதால், சரக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் இருக்காது.
இலங்கை இறக்குமதியாளர்கள், தமிழக ஏற்றுமதியாளர்களை தவிர்த்து, கேரள ஏற்றுமதியாளர்களை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். தவிர கொச்சின் துறைமுகத்துக்கும் போக்குவரத்து மூலம் கிடைக்கும் பணம் அதிகமாகலாம்.
தற்போது, கொச்சின் துறைமுகத்தில் சரக்கு கப்பல்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என, கொச்சின் துறைமுக அதிகார சபை, துபாயில் இருந்து செயற்படும், அரபு எமிரேட்ஸ் அரசுக்கு சொந்தமான DP World Pvt. Ltd நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இந்த நகர்வு, கொச்சின் துறைமுகத்துக்கு நன்மையில் முடியலாம்” என்றார்.
இருந்து பாருங்கள், அப்படியொரு நிலை ஏற்பட்டால், அதற்கு சாதகமாக கேரள எம்.பி.க்கள் டில்லியில் ஒற்றுமையாக லாபி செய்வார்கள்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: