தமிழகத்தில் தற்போது நடக்கும் அரசியல் கூத்துக்கள் இலங்கை தமிழருக்கு
ஒருபோதும் ஒரு நல்ல பங்களிப்பை நல்காது என்றே எண்ணுகிறேன் ஏனெனில் வரலாறு அப்படிப்பட்டது .
தமிழகம் என்று நாம் பெருதும் அறிந்து வைத்திருப்பது தமிழக சினிமாக்காரர்களையே . அடுத்த இரண்டாவது இடத்தில் நாம் தமிழகத்தவருடன் கொண்டிருக்கும் பரிச்சயமானது தமிழ்நாட்டு பத்திரிகைகள் மூலமாகத்தான் .
இந்த இரண்டு உடக தொழில் துறையினரும் இலங்கை தமிழர்களை தமது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளனர்,
தமது வாடிக்கையாளர்களின் விருப்புக்களை நிறைவேற்றி தமது வருமானத்தை உறுதி செய்வல்லாமல் வேறு எந்த காரணத்திற்காகவும் இவர்கள் இலங்கை தமிழர்களுக்காக உண்ணா விரதம் போன்றவற்றை செய்வதில்லை நம்பினால் நம்புங்கள் . டெலோவை புலிகள் அழிக்கும்வரை சாதாரணமான மக்களிடம் இலங்கை தமிழர்களிடம் அனுதாபம் அன்பு எல்லாம் இருந்தது உண்மையே . அதன்பின்பு இவங்க இன்னா சொந்த சகோதரர்களையே கொல்றாங்கப்பா அப்புறம் ஏன் சிங்களவனை திட்டிறாங்க என்று சாமான்யன் சலிப்படைய தொடங்கினான் .
இறுதியில் பத்மநாபாவை சென்னையில் கொன்றதும் ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களின் சாயமும் தமிழ்நாட்டில் வெளுத்து விட்டது . ராஜீவ் காந்தியை கொன்றதும் அவர்கள் இலங்கை தமிழர்களை படுமோசமாக வெறுக்க தொடங்கினார்கள் .இன்று வரை இதுதான் உண்மை.
பின்பு புலன்பெயர் புது பணக்காரரின் பணத்திற்கு விலைபோன தமிழக உதிரிகளை வைத்துகொண்டு ஆதரவு படம் கீறுகிறார்கள். இவர்கள் கீறும் படம் ஒரு ஜீவனுள்ள ஓவியம் அல்ல. வெறும் இட்டு கட்டிய சாயக்கலவை.
சில காலத்திற்கு முன்பாக அண்ணா ஹாசாரெயின் போராட்டத்திற்கு தமிழக மாணவர்கள் சென்னையை கலக்கினார்கள் . அடுத்து அஜீத்தின் மங்காத்தா படம் ரிலீசானதும் மங்காத்தாவை IIT மாணவர்கள் கலக்கினார்கள் , ரோட்டுக்கு இறங்க ஏதாவது ஒரு காரணம் தேவை அது மங்காகாத்தாவாக இருந்தால் என்ன போராட்டமாக இருந்தால் என்ன? பொழுது போச்சில்லே
எழுபதிற்கு முன்பெல்லாம் தென்னிந்திய திரைப்படங்களின் ஏரியா விற்பனையில் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களில் சிலோன் ஏரியா இருக்கும் . அதுவும் அனேகமாக மதுரை ஏரியாவில் வசூலை குவிக்கும் படங்கள் இலங்கையிலும் நல்ல வசூலை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக கேள்வி . ஒரு படம் அனேகமாக ஏழு அல்லது எட்டு பிரதிகள் இறக்குமதியாகும். பின்பு சினிமாஸ் குணரத்தினம் வத்தளையில் (கருப்பு வெள்ளை) பிரதியாக்கம் செய்ய தொடங்கியதும் ஒரு பிரதி மட்டுமே வாங்கப்பட்டு பல பிரதிகள் எடுக்கப்பட்டன.
பின்பு இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம் மூன்று பிரதிகள் மட்டுமே இறக்குமதி செய்யலாம் என்று கட்டுப்பாடு விதித்தது , சில படங்கள் நன்றாக ஓடி ஓடி தேய்ந்த பின்பு புது பிரதிகள் எடுக்க முடியாமல் விநியோகத்தர்கள் திண்டாடினர் . அப்பொழுது பிரபலமாக இருந்த சிலோன் தியேட்டர்ஸ் , சினிமாஸ் லிமிடட் . சிலோன் என்டர்டைன்மென்ட் போன்ற காலூன்றிய நிறுவனங்களுக்கு போட்டியாக தொழிலை ஆரம்பித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு தியேட்டர் முதலாளி வல்வெட்டி துறையை சேர்ந்த கடத்தல் காரர்கள் மூலம் ஓடி களைத்த பழைய கொப்பிகளுக்கு பதிலாக புத்தம் புதிய கொப்பிகளை வெற்றி கரமாக திருட்டு வெளியீடு செய்தார் , இந்த முதலாளி அன்றை தமிழரசு கட்சியின் (தமிழ் தேசிய கூட்டணி) முக்கிய பினான்சியராக அன்றில் இருந்து இன்று வரை இருக்கிறார் . கள்ள கடத்தல் பற்றி அந்த காலத்தில் ஏராளமான கதைகள் உலா வந்தன அவற்றில் பல கதைகள் சம்பாஷணைகளின் சுவாரசியம் கருதி இட்டு கட்டப்பட்டவையாகும் . ஆனாலும் சில முக்கியமான தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டே இருந்தன . அதாவது ஆடைகள் வளைகாப்பு போன்ற ஆடம்பர பொருட்களும் சில சமயம் சக்கரை மூட்டை மிளகாய் போன்ற உணவு பொருட்களுமே கடத்தப்பட்டன என்றும் பலரும் நம்பி கொண்டிருக்கையில் அவர்கள் அபின் கடத்தலில் முக்கியமாக ஈடுபட்டிருந்தனர் என்ற விபரம் பலருக்கும் தெரியாது இந்த மாபியா வகையான கடத்தலில் வல்வெட்டி துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம்களும் பிற்காலத்தில் கொடிகட்டியதாக கேள்விபட்டிருக்கிறேன் , அபின் கடத்தலுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புக்கள் வரலாற்றில் மிகவும் இணைபிரியாதவையாகும் . உதாரணமாக சீனாவின் அபின் பாரம்பரிய அபின் யுத்தம் மற்றும் தாலிபான்களின் அபின் பயங்கரவாதம் போல இன்னும் பலவற்றை குறிப்பிடலாம்
சினிமாவும் அதனோடு ஒட்டி உறவாடிய கள்ள கடத்தலும் இந்த இரண்டோடும் ஒட்டி உறவாடிய தமிழ் அரசியலும் மூன்று வெவேறு துறைகள் . ஒன்றோடு ஒன்று கள்ள உறவு வைத்து பெற்ற குழந்தை பிற்காலத்தில் காலத்தில் தமிழர்களின் நியாமான கோரிக்கைகளை தனதாக்கி கொண்டது, இலங்கை வரலாற்றில் நடந்த மிகபெரும் சமுக மோசடி இதுவாகும்.
சினிமாகாரனுக்கும் கடத்தடல்காரனுக்கும் சமுக அந்தஸ்த்தை அல்லது ஒரு அங்கீகாரத்தை பெற அரசியல் தேவை பட்டது , அரசியல் களவாணிகளுக்கோ அரசியல் செய்ய பணமும் தேவைபட்டது ஆள் பலமும் தேவை பட்டது . போதாக்குறைக்கு பல சமுக விரோதிகளுக்கும் பணம் வந்த பின்பு சமுக அங்கீகாரம் தேவை பட்டது . இலங்கை தமிழர்களின் தலையில் ஏறி உட்கார்ந்தார்கள் இந்த கள்ளர் கூட்டம் . இன்னும் சவாரி செய்கிறார்கள்
இந்த தமிழரசு முதலாளி MGR மூலம் பெரும் பயன் அடைந்தவர் subeedcham.blogspot.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக