சுமார் மூன்று தசாப்தங்களாக யுத்தத்தின்சகல பரிணாமத்தையும் பார்த்து
வாழ்க்கை வெறுத்து போய் இருக்கும் நாம் மீண்டும் ஒரு வெறுப்பை உற்பத்தி செய்யும் அரசியல் கலாசார பொறிக்குள் விழுந்து விடமாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
கடந்த காலத்தில் போராட்டத்தின் பேரால் அரங்கேறிய கேலி கூத்துக்களை அலசி ஆராய்வது மிகவும் அவசியமானது
நாம் எப்போதும் நம்மை ஒரு பாதிக்கப்பட்ட ஒரு இனமாகவே எண்ணுகிறோம் ,
உலகில் நாம் மட்டும் அல்ல பாதிக்கப்பட்டவர்கள்
எம்மால் பாதிக்கப்பட்டவர்களும் உலகில் உண்டு என்ற கருத்தை நாம் ஒரு போதும் எதிர்கொள்வதில்லை
மாறாக நாம் பிறரை பாதிப்புக்கு உட்படுத்தினோம் என்று உண்மையை பேசினாலே அவனை ஒரு துரோகி என்று பட்டம் சூட்டி விடுவோம்
ஏன் அதிகம் போவான் ? புலிகளால் சில மணி துளிகளில் வாழ்ந்து வந்த மண்ணையும் வீட்டையும் புலிகள் துரத்திய முஸ்லிம்களிடம் கேட்டு பாருங்கள் தமிழ் புலிகள் செய்த கொடுமை எந்த வகையில் சேர்த்தி என்று புரியும், வடகிழக்கு முஸ்லிம்கள் தெருவில் அநாதரவாக கையில் கிடைத்த அற்ப பொருட்களுடன் மட்டுமே வெளியேறினார்கள் பச்சை தமிழையே தாய் மொழியாக கொண்ட அந்த இஸ்லாமிய சகோதர்களுக்கு ஆறுதலாக குரல் கொடுக்க யாருக்கும் அன்று தைரியம் இருக்க வில்லை . அது புரிந்து கொள்ள முடிகிறது ,
ஆனால் இன்றும்கூட புலிகளால் அவிழ்த்து விடப்பட்ட அந்த இனச்சுத்தி கரிப்பை பற்றி மனித உரிமைகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் உலக தமிழ் அமைப்புக்களோ தமிழக மாணவர்களோ சினிமா காரர்களோ ஏன் ஓங்கி குரல் கொடுக்கிறார்கள் இல்லை ?
நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று ஓயாமல் இடும் ஒப்பாரிகள் எவ்வளவு தூரம் தகுதி வாய்ந்தவை என்று நம்மை நாமே கேட்டு கொள்ளவேண்டிய நேரம் வந்து விடவில்லையா?
நாம் நியாமாக நடந்து கொள்கிறோமா ?
கண்ணதாசனின் அழகான வரிகளில் சொல்வதானால்
ஊர் பார்க்கும் உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண்போன போக்கிலே கால் போகலாமா subeedcham.blogspot.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக