ஞாயிறு, 31 மார்ச், 2013

இலங்கையில் வியாபாரம் செய்து வருகிறோம். தொழிற்சாலைகளும் நடத்தி வருகிறோம். பிழைப்புக்கு ஏற்ற நல்ல

ஜி.எப்.ராஜி, கண்டி (முகாம் சென்னை)யிலிருந்து எழுதுகிறார்:
நான், இலங்கை வாழ் இந்தியன். தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவன்.எங்கள் மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பலரும், எங்கள் முன்னோர் காலம் முதல், இலங்கையில் வியாபாரம் செய்து வருகிறோம். தொழிற்சாலைகளும் நடத்தி வருகிறோம். பிழைப்புக்கு ஏற்ற நல்ல ஊர்.நாங்கள் நகரத்தில் வாழ்ந்தாலும், தோட்டத் தொழிலாளிகளும், சிங்கள கிராமத்தில் வாழும் தமிழர்களும், சிறு சிறு மளிகை கடைகளை நடத்தி வருகின்றனர்.இங்குள்ள தமிழர்கள், சிங்களர்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவதால், அங்கு, எங்களுக்கு எதிராக, சிங்களர்கள் வந்தால் எங்களால் தாக்கு பிடிக்க முடியாது. இங்குள்ளவர்களுக்கும் இது தெரியும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக, சிங்களவர்களை தூண்டிவிடும் செயலாக இவற்றை கருதுகிறேன்.
இங்கு வரும், சிங்களவர்களையும், புத்த மதத் துறவிகளையும் தண்டிப்பதால் என்ன லாபம்? போரில் இறந்த உயிர்கள், மீண்டும் வருமா?இறந்த தமிழர்களை சுட்டிக் காட்டி, நன்றாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு, தற்போது தொந்தரவு கொடுப்பது நியாயமா?அரசியல் தலைவர்களை சந்தித்து, நேரில் விவரம் சொல்லி விட்டு வரும்படி, என்னிடம் பலர் கூறினர். இங்குள்ள நிலைமையைப் பார்த்தால், சிங்கள வெறியர் எனக் கூறி, தமிழ் வெறியர்கள் என்னையும் தாக்கி விடுவர் என்றே பயப்படுகிறேன்.
சிங்கள புத்த சாமியார்களை, தமிழர்கள் தாக்கினால், அங்குள்ள புத்த மதத்தை சேர்ந்த மக்கள், தமிழர்களை தாக்குவதற்கு காரணமாயிருக்கும் அல்லவா? அறிவாளிகள் இதை சிந்திக்கட்டும்.இலங்கையில் வாழும் தமிழர்களிடம், இலங்கை வாழ் சிங்களர்களும், புத்த மதத்தினரும் ஒற்றுமையாக வாழ, இங்குள்ள தமிழின தலைவர்கள் இடையூறு ஏற்படுத்தாமல் இருந்தால் போதும். என் கருத்தை, எத்தனை பேர் ஆதரிப்பரோ தெரியவில்லை.


dinamalar

கருத்துகள் இல்லை: