செவ்வாய், 2 ஏப்ரல், 2013

யஷ்வந்த் சின்கா : JPC முன் ஆஜராக ராஜாவை அழைக்காதது ஏன்

புதுடில்லி :""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து, விசாரிக்கும்பார்லிமென்ட் கூட்டு குழு முன், முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ராஜா மீண்டும் ஆஜராக வாய்ப்பு அளிக்காமல் புறக்கணித்தது தவறு. இதன் மூலம், உண்மையை மூடி மறைக்க, முயற்சி நடந்துள்ளது,'' என்று பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா கூறினார்.   ராஜாவின் குற்றம் என்ன?  வடநாட்டார்கள், ஒரு தலித்தை வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றனர்பிஜேபி -யில் நன்கு விவரம் தெரிந்தவர்கள் என்றால் அது அருண் ஜெட்லி , யஸ்வந்த் சின்கா , நரேந்திர மோடி போன்றவர்களே... யஸ்வந்த் கேட்டது மிக சரியான கேள்வி...// குற்றவாளியை விசாரிக்காமல் என்ன விசாரணை நடத்துகிறார்கள் ?? யாரை வைத்து விசாரணை நடத்துகிறார்கள் ?? சாக்கோ அப்பட்டமாக காங்கிரஸ் -க்கு சாதகமாக நடக்கிறார்.. .

 ராஜா கோரிக்கை:ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழுவான, ஜே.பி.சி., விசாரித்து வருகிறது. இக்குழு, தன் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் வகையில் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டு வருகிறது.தற்போதைய, அட்டர்னி ஜெனரலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்த காலத்தில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தவருமான, வாகன்வதி, ஜே.பி.சி., முன் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை கூறினார்."2ஜி' உரிமம் வழங்குவது தொடர்பான, பத்திரிகை குறிப்பு, கடைசி நேரத்தில், ராஜாவால் திருத்தப்பட்டதாக, அவர் கூறினார். இதையடுத்து, "ஜே.பி.சி., முன் ஆஜராகி, வாகன்வதி தெரிவித்த கருத்திற்கு பதில் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, ராஜா கோரிக்கை வைத்தார். ஜே.பி.சி., முன் ராஜா ஆஜராவதை, குழுவின் தலைவரான, பி.சி. சாக்கோ விரும்பவில்லை. ராஜா சொல்ல விரும்புவதை, எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி, சாக்கோ கூறினார். இதையடுத்து, கடந்த, 24ம் தேதி, தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்து ராஜா, ஜே.பி.சி.,க்கு கடிதம் அனுப்பினார்.ராஜாவை, பார்லிமென்ட் கூட்டு குழு முன், ஆஜராக அனுமதிக்காததற்கு, பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கடுமையாக சாடியுள்ளார்.  


"கடிதம் எழுதுவேன்':


இதுகுறித்து, டில்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜா தன் தரப்பு கருத்தை சொல்வதற்கு வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே, புறக்கணித்துள்ளனர். ராஜாவை அழைக்க, குழுவின் தலைவரான சாக்கோ விரும்பவில்லை. இது தொடர்பாக குழு உறுப்பினர்களை கூட்டி விவாதிக்கவில்லை.இதன் மூலம், உண்மையை மூடிமறைக்க முயற்சி நடந்தது தெள்ளத் தெளிவாகிறது. இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், லோக்சபா சபாநாயகர் மீராகுமாருக்கும், குழுவின் உறுப்பினர் என்ற முறையில் கடிதம் எழுதுவேன். எந்த நோக்கத்திற்காக, கூட்டு குழு அமைக்கப்பட்டதோ அது பூர்த்தியாகவில்லை.இவ்வாறு, யஷ்வந்த் சின்கா கூறினார்.

சின்காவுடன், குழுவில் உள்ள இடதுசாரி கட்சி உறுப்பினர்களும், ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்காததை கண்டித்துள்ளனர்.


"ராஜாவிடம் வாக்குமூலம் பெறும் பேச்சுக்கே இடமில்லை':
""முன்னாள் மத்திய அமைச்சர், ராஜாவை நேரில் அழைத்து வாக்குமூலம் பெறுவது என்ற பேச்சுக்கே, இடமில்லை. இது தொடர்பான கேள்வியே, முடிந்து போன ஒன்று,'' என, பார்லிமென்ட் கூட்டுக் குழு தலைவர் சாக்கோ கூறினார்.

பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த்சின்காவின் பேட்டி குறித்து, தொலைபேசியில், சாக்கோ கூறியதாவது:நான் தற்போது கேரளாவில் உள்ளேன். ராஜாவின் கோரிக்கை பற்றி, ஏற்கனவே பலமுறை பதில் அளித்து விட்டேன். ராஜா கூறினாலும் சரி. யஷ்வந்த் சின்கா கூறினாலும் சரி; அதுபற்றி, இனி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்த போது, இந்தப் பிரச்னை பற்றி பா.ஜ., தலைவர்கள் ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்கா ஆகியோரிடமும் விவரித்து விட்டேன். இந்த விவகாரத்தில், நான் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றியும், கூட்டுக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், தெரிவித்து விட்டேன்.எனவே, ராஜாவை கூட்டு குழுவுக்கு வரும்படி, நேரில் அழைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அவரது வாக்கு மூலத்தை, எழுத்துப் பூர்வமாக அளிக்கலாம் என, கூறிவிட்டேன். அதனால், ராஜாவை அழைப்பதா, வேண்டாமா என்ற கேள்வியே முடிந்து போன ஒன்று.ஒரு மாதத்துக்கு முன்னரே, இந்த பிரச்னைக்கு நான் பதில் அளித்துள்ளதால், திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்பதில் அர்த்தமே இல்லை.இவ்வாறு சாக்கோ கூறினார்.

பார்லிமென்ட் கூட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரை இதுதொடர்பாக கூறியதாவது:
ராஜாவின் கடிதங்கள் குறித்து, எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. ராஜாவை அழைப்பதா, வேண்டாமா என்பது பற்றி, அ.தி.மு.க., வுக்கு அதிகாரப்பூர்வமாகவோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வகையிலோ, எந்த தகவல் பரிமாற்றமும், இதுவரை இல்லை. ராஜாவை அழைப்பதா, வேண்டாமா என்பது குறித்து, முதலில் பார்லிமென்ட் கூட்டுக் குழு முடிவு செய்யட்டும்.அதன்பின், அ.தி.மு.க.,வின் நிலையை, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார்.இவ்வாறு தம்பித்துரை கூறினார்.

- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: