தமிழகத்தில் புத்த பிக்குகள்
தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்தியாவில் இருந்து வரும்
சரக்குகளை கையாள மாட்டோம் என கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல்
விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்க
நிர்வாகி மகேஷ் சமரவிக்ரமா கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த புத்த
பிக்குகள், யாத்ரீகர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு
வருகின்றனர். இதை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்க்க மாட்டோம்.
தென்னிந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வரும் சரக்குகளை கையாள
மாட்டோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை கண்டிக்கும்
பதாகைகளை துறைமுக வளாகத்தில் ஊழியர்கள் வைத்திருந்தனர். இதற்கிடையே துறைமுக
அலுவலர் நளின் அபோன்சோ கூறுகையில்: ஊழியர்களின் கோரிக்கைக்கு துறைமுக
நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக