தாய்லாந்தில்
10 மில்லியன் பாட் பணத்தை 100 ஏ.ரீ.எம். அட்டைகளை
பயன்படுத்தி களவாக பெற்றுக்கொண்ட மலேஷியர்கள் நால்வர் மற்றும் இலங்கையர்கள் இருவர்களை கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. ஏ.ரீ.எம். இயந்திரத்திலிருந்து 43 வயதான எஸ்.சசீலன் பணத்தை பெற்றுக்கொண்டிருந்தபோது பிடிபட்டார். இவரிடம் 10 போலி ஏ.ரீ.எம் காட்கள் இருந்தன. பின்னர் மேலும் 5 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் 162 இலத்திரனியல் அட்டைகள் 18,000 பாட் பணமும் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்கள் ஒரு மாதத்தில் 10 மில்லியன் பாட் பணத்தை களவாக பெற்றுக்கொண்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளனர். இலங்கையை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.thenee.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக