செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சவுதி அரேபியா, பெண்கள் பூங்காக்களில் சைக்கிள் செலுத்த அனுமதி


சவுதி அரேபியா, பெண்கள் சைக்கிள் மற்றும் மொப்பெட் செலுத்துவதற்கு
அனுமதி வழங்குகிறது. ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட இடங்களிலேயே இவற்றை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதியில் இருந்து வெளியாகும் அல்-யவுன் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, பெயர் குறிப்பிட விரும்பாத மத காவல்துறை (religious police) அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, பெண்கள் பூங்காக்களில் சைக்கிள் செலுத்த அனுமதிக்கப் படவுள்ளனர். அதே நேரத்தில், சைக்கிள் மற்றும் மொப்பெட் செலுத்தும் பெண்கள், சைக்கிளுடன் வந்தால் மட்டும் போதாது, தமது உறவினரான ஆண் ஒருவருடனும் வந்திருக்க வேண்டும். அத்துடன், தலையில் இருந்து பாதம்வரை உடல் முழுவதும் மறையும்படி இஸ்லாமிய ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் சைக்கிள் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்துக்கு அல்ல, பொழுதுபோக்குக்கு மட்டுமே எனவும் அல்-யவுன் தெரிவித்துள்ளது. அதுவும் சரிதான். பூங்காவில் போக்குவரத்து செய்ய முடியாதுதானே. /viruvirupu.com/

கருத்துகள் இல்லை: