இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவிற்கு எதிராக அமெரிக்க
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மூவர் இணைந்து, ராஜபக்ஷேவிடம் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கு இது.
விடுதலைப் புலிகள் மீது போர் தொடுத்ததால் தமக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதற்கு ராஜபக்ஷே இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மூவர் இணைந்து தாக்கல் செய்த மனுவை, அமெரிக்க நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை செய்தது.
மஹிந்த ராஜபக்ஷே ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரையில் அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு (Diplomatic Immunity) உள்ளதால், இந்த வழக்கு மேற்கொண்டு தொடரப்பட முடியாது என ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் கூறியிருந்தது.
அதையடுத்து, அமெரிக்க சட்ட வல்லுனர் புருஸ் பெய்ன், “இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்க ராஜாங்க அமைச்சு ராஜதந்திர பாதுகாப்பு வழங்கியது தவறானது என, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மூவர் சார்பில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவும் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக