சனி, 6 ஏப்ரல், 2013

கட்சி நோட்டீசுக்கு பதில் இல்லை : அழகிரி ஆதரவாளர்கள் முடிவு?

மதுரையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து, கட்சி தலைமை விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் சொல்ல போவதில்லை' என்ற முடிவை அழகிரி ஆதரவாளர்கள் எடுத்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்ற கூட்டம், மார்ச் 30ல் நடந்தது. இதில், நகர் தி.மு.க., நிர்வாகிகள் அழைத்தும், அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. இதனால், அவைத் தலைவர், நகர் துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என, அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் 15 பேருக்கு, தி.மு.க., அமைப்பு செயலாளர் இளங்கோவன், விளக்கம் கேட்டு "நோட்டீஸ்' அனுப்பினார். மேலும், "ஒரு வாரத்திற்குள் பதில் அனுப்பாவிட்டால், உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்க கூடாது' என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.நோட்டீஸ் பெற்ற மறுநாள், 15 ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர் அழகிரியை சந்தித்தனர். அப்போது ""உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லுங்கள்,'' என்று கூறினார். இதன் பின், சில முக்கிய நிர்வாகிகளை அழகிரி அழைத்து பேசியபோது, ""கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு யாரும் பதில் சொல்ல வேண்டாம். என்னிடம் கேட்கட்டும் நான் சொல்லிக்கிறேன்,'' என்று அவர் கூறியதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால், நோட்டீசுக்கு பதில் கூறி, விளக்க கடிதம் அனுப்ப போவதில்லை என்று, அவரது ஆதரவாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்."நோட்டீஸ்' பெற்ற ஒரு மூத்த நிர்வாகி மட்டும் தலைமைக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில், ""அரசியல் ரீதியாக பல்வேறு இடையூறுகளை கட்சி சந்திக்கிற நேரத்தில் இதுபோன்ற "நோட்டீஸ்' (ஒருவருக்கு ஆதரவாக, ஒருவருக்கு எதிராகவும்) தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இருவரையும் அழைத்து பேசி, ஒற்றுமையை ஏற்படுத்த தலைமை முயற்சிக்கவேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: