திங்கள், 10 செப்டம்பர், 2012

India Pakistan விசா விதிமுறை கள் எளிதாக்கப்படுகிறது

Indian Foreign Minister S.M. Krishna, left, and his Pakistani counterpart Hina Rabbani Khar, right, arrive for a meeting in Islamabad, Pakistan on Saturday, Sept. 8, 2012. Krishna arrive in Pakistan for talks, the latest sign of a thaw in relations between two countries that have fought three major wars against each other. Photo: Anjum Naveed / AP


மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா 3 நாள் பய ணமாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அந் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ரப் பானி காரிடம் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார். அப்போது இந்தியா - பாகிஸ்தா னுக்கிடையிலான உறவு கள், எளிமையான விசா கட்டுப்பாடுகள், மும்பை தீவிரவாத தாக்குதல் போன்ற முக்கிய விஷ யங்கள் குறித்து விவாதிக் கப்பட்டு வருகின்றன. எளிய முறையில் விசா வழங்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெ ழுத்திடப்படுகிறது.
1974ஆம் ஆண்டு ஏற் படுத்தப்பட்ட பழைய ஒப்பந்தத்திற்குப் பதி லாக விசா வழங்குவதற் கான நடைமுறை எளி தாக்கப்படுகிறது. வணி கத் துறையினர் மட்டு மின்றி சுற்றுலாப் பயணி கள், மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் போன்ற அனைத்து தரப் பினரும் பயனடையும் வகையில் விசா விதிமுறை கள் எளிதாக்கப்படுகிறது. முதியவர்களுக்கு காவல் துறை விசாரணையில் இருந்து விலக்கு அளிக் கப்படுகிறது.
குழந்தை கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாகா எல்லையில் அமைந் துள்ள சோதனைச்சா வடி அலுவலகத்திலேயே விசா பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படு கிறது. வியாபாரிகள் இது வரை ஒருமுறை விசா வாங்கினால் ஒரு நகரத் திற்கு மட்டுமே செல்ல அனுமதி இருந்தது. இதை தளர்த்தி 5 நகரத் திற்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
10 முதல் 50 நபர்களுக்கு சுற்றுலா விசா வழங்கும் வகையிலும் விதிமுறை கள் திருத்தப்படுகின்றன. இதுபற்றி பாகிஸ் தான் உள்துறை அமைச் சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில்: கடந்த மாதம் டெஹ்ரானில் நடைபெற்ற அணி சேரா நாடுகள் மாநாட்டின் போது இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ் தான் அதிபர் சர்தாரி ஆகியோர் இந்த ஒப்பந் தம் குறித்து முடிவு செய் தனர் என்றார்.
இந்திய-பாகிஸ்தான் வெளியுற வுத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த் தையில்  இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: