செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பி.ஆர்.பி. நிறுவனம் டபுள் ஓகே, அழகிரி மகன் நிறுவனம் நாட் ஓகே!! ஏன்? ஏன்?

Viruvirupu



மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் லைசென்ஸை தமிழக அரசு ரத்து செய்தது தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பெரியளவு முறைகேடு செய்ததாக காவல்துறையால் கூறப்படும் பி.ஆர்.பி.-யின் நிறுவனத்தின் லைசென்ஸ் அப்படியே இருக்க, துரை தயாநிதியின் நிறுவனத்தின் லைசென்ஸை ரத்த செய்ததற்கு பின்னணியில் அரசியல் காரணம் உள்ளதா என்பதே அந்த சர்ச்சை.
கிரானைட் விவகாரம் தொடர்பாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகள் குழு தீவிர சோதனை நடத்தி, முறைகேடுகளுக்கு தலைமை வகித்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு சீல் வைத்தனர். அதன் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவரது நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்படவில்லை.
இது தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாக தரப்பில் விசாரித்தபோது, திருப்திகரமான பதில் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.
ஒலிம்பஸ் கிரானைட் குவாரியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ள விபரங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன பங்குதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களோ, அவர்கள் சார்பாகவோ யாரும் எந்தவித விளக்கத்தையும் தரவில்லை.
அதையடுத்தே ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த வேறு சில குவாரிகளின் லைசென்சுகளை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை: