கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது என, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார். இது குறித்து அவர்
தூத்துக்குடியில், ‘’நிலக்கரி ஊழல் பிரச்னையில், ஆதாரமற்ற குற்றச் சாட்டை
மத்திய காங்., அரசு மீது, பா.ஜ., சுமத்தியுள்ளது. இதுகுறித்து விளக்க
மளிக்கத்தயார் என பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் கூறியும்,
பார்லி.,யை நடக்கவிடாமல் பா.ஜ., முடக்கிவிட்டது.
இது,
ஜனநாயகத்தை நசுக்கும் வேலை. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான
போராட்டங்கள் தேவையற்றது. தமிழகத்தில், மிகப்பெரிய அளவில் மின்வெட்டு
உள்ளது. ஆகவே, இங்கு மின்உற்பத்தி துவங்கப்படவேண்டியது அவசியம்.
இந்த அணுமின் நிலையம் குறித்து எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை என மத்திய அரசு பலமுறை விளக்கி விட்ட பின்னரும்,
சில சுயநலவாதிகள், தங்களின் ஆதாயத்திற்காக, அப்பா வி மக்களை திரட்டி போராட்டத்தை நடத்திக் கொண்டுள் ளனர். இதற்கு, பெரும்பான்மையான மக்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்காது.
சில சுயநலவாதிகள், தங்களின் ஆதாயத்திற்காக, அப்பா வி மக்களை திரட்டி போராட்டத்தை நடத்திக் கொண்டுள் ளனர். இதற்கு, பெரும்பான்மையான மக்களின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக