முரசொலி பத்திரிகையில்
கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதியும், 6-ந்தேதியும் தமிழக அரசு பற்றியும், முதல
மைச்சர் ஜெயலலிதா பற்றியும் கட்டுரை வெளியாகி இருந்தது. இதை எதிர்த்து
சென்னை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில்
முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில்
கட்டுரை அமைந் துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் செல்வம்,
செய்தியாளர் மூர்த்தி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்
என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு முதன்மை
நீதிபதி பொன்.கலையரசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது
செல்வம், மூர்த்தி ஆகியோர் அக்டோபர் 10-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு
சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக