செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நாளைய தி.மு.க அழகிரி தான்!' - ராசிபுரத்தில் புகழாரம்!


ராசிபுரத்தில் சலவை தொழிலாளர்களுக்காக 'நவீன சலவை வளாகம்' மத்திய அமைச்சர் மு.க.அழகிரியால் திறக்கப்பட்டது. மதுரையில் இருந்து காரிலேயே வந்தார். ராசிபுரம் எல்லை ஆண்டலூர் கேட்டில் இருந்து ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை முன்னூறுக்கும் மேற்ப்பட்ட டூ-வீலர்களில் உ.பிக்கள் வரவேற்று ஊர்வலமாக வந்தனர்.

புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நவீன சலவை வளாகத்தை அழகிரி திறந்து வைக்க அருகில் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், எம்.பி கே.பி ராமலிங்கம் இருந்தனர்.
'அறிஞர் அண்ணாவை நாங்கள் பார்த்தது இல்லை ஆனால் அந்த அண்ணாவாக எங்களுக்கு காட்சி தருபவர் எங்கள் அண்ணன் அழகிரி தான்' என்றார் நாமக்கல் மாவட்ட விவசாய அணி து.செ ஈஸ்வரன்.எம்.பி
கே.பி ராமலிங்கமோ 'எதிர்காலத்தில் கலைஞர் கோட்பாடுகளை இந்திய தீபகற்பதிலேயே தாங்கி பிடிக்கும் தீப ஒளி அண்ணன் அழகிரி தான்.
தொண்டர்கள் சொன்னது போல அண்ணாதுரை தான் அண்ணன் அழகிரி. அமைதியா இருக்காரு எழுந்தா அவர் ஏழு ஞாயிறு. நாளைய தி.மு.க அவர் தான். அவர் காலில் அடிபட்டு இருக்கு நடக்கிறது, நிற்பது சிரமம் ஆனாலும் சலவை தொழிலாளர்களுக்காக இங்கு வந்துருக்காரு. நம் வேட்டி சட்டை வெள்ளையாய் இருக்க அவர்கள் தான் காரணம் அதனால் தான் இந்தியாவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து முதல் முறையாக இந்த சலவையகம் ராசிபுரத்தில் திறக்கிறேன்' என்றார்.
மத்திய அமைச்சர் அழகிரி பேசியபோது,
'சலவை தொழிலாளர்களுக்கு ட்ரையர் உட்பட மேலும் உபகரணங்கள் வாங்க உள்ளார் நம்ம கே.பி.ராமலிங்கம். அவர் எனக்கு அறிவுரை சொல்லிகிட்டே இருப்பார் இது எனக்கு தொல்லையா இருக்கும் (சிரிக்கிறார்). ஓய்வே தரமாட்டார். டில்லில தொல்லை கொடுத்துகிட்டு இருந்தார் இப்போ இங்கயும் கூப்பிட்டு தொல்லை தரார்...(அனைவரும் சிரிக்கின்றனர்) ஆனாலும் தொழிலாளர்களுக்காக வந்தேன். மேலும் நான் மத்திய அமைச்சராக இருந்து நிறைய மக்களுக்கு செய்துள்ளேன் தற்போது உர விலையேற்றம் என்கின்றனர் ஆனால் உர விலையை ஏற்ற மாட்டேன்' என பேசி முடித்தார்.
காந்திசெல்வன் ஸ்டாலின் ஆதரவாளர். ராசிபுரம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் நிறைந்த ஊர் அங்கு தீவிர அழகிரி ஆதரவலாரான கே.பி ராமலிங்கம் அழகிரியை கூட்டி வந்து உற்சாக வரவேற்ப்பு தந்தது வட மாவட்டங்களில் அழகிரியின் பார்வை படுவதை காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: