நாகர்கோவில்: எங்கு போனாலும் தப்பாகப் பேசுகிறார்கள், பெற்ற தாயே
தவறாகப் பேசுகிறார். எனது அழகே எனக்கு பெரும் துயரத்தைக் கொடுத்து விட்டது.
இதனால் எனது மகளுடன் நான் இந்த உலகை விட்டே போகிறேன் என்று எழுதி வைத்து
விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்.
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த துயரச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு...
நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி, திருவிடைக்கோட்டையைச் சேர்ந்தவர் தாணப்பன். இவரது மகள் ஷீபா. 28 வயதான இவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். எரிந்த நிலையில் அவரது வீட்டுக்குப் பின்புறமிருந்து உடலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார் ஷீபா. அதில் அவர் கூறியிருப்பதாவது..
இவ்வளவு அழகா...?
சிறு வயதிலேயே சிவப்பாக இருப்பேன். என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் இவ்வளவு அழகாக இருக்கிறாயே என்று கூறுவார்கள். இதை கேட்கும்போதெல்லாம் எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் இது எவ்வளவு ஆபத்து என்பது நான் வளர்ந்து பருவமடைந்த பின்பு தெரிந்தது. வெளியே சென்றால் தப்பு, வாலிபர்களை பார்த்தால் தப்பு, பேசினால் போச்சு என்று எல்லாவற்றிற்கும் கண்டிக்கப்பட்டேன். இதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
முதல் கணவர் பிரிந்தார் - 2வது திருமணம்
இளம்பெண் நிலைக்கு வந்து பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்பும் எனக்கு சோதனை தீரவில்லை. என் அழகே எனக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. கணவர் பிரிந்து சென்றார். அதன் பின்பு 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவர் வெளிநாடு சென்ற பின்பு ஊரில் தனியாக இருந்தேன். அப்போது வெளியே சென்று யாரிடம் பேசினாலும் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தனர். என் நடத்தையை சந்தேகப்பட்டனர்.
ஊர் முழுவதும் என்னை பற்றி அவதூறு பரப்பப்பட்டது. இதை என் தாயாரே என்னிடம் கேட்டார். அவரே என்னை நம்பவில்லை. இப்படிப்பட்ட உலகில் எப்படி வாழ்வது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் தற்கொலைக்கு முடிவு எடுத்தேன். நான் இறந்த பின்பு எனது மகளுக்கும் இதேநிலை ஏற்படும் என்று எண்ணினேன். எனவே அவளையும் என்னோடு அழைத்துச்செல்ல முடிவு செய்தேன். வாழ பிடிக்காததால் நாங்கள் இந்த உலகை விட்டு செல்கிறோம் என்று எழுதி வைத்துள்ளார் ஷீபா.
தான் அழகாக இருந்ததால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பதையும் ஷீபா கடிதத்தில் விளக்கியுள்ளார்.
ஷீபாவுக்கு 2 கல்யாணம் நடந்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் என்பவரை மணந்தார். அவர் மூலம் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் பின்னர் செந்தில்குமார் விவாகரத்து பெற்று விட்டுப் போய் விட்டார். இதையடுத்து அய்யப்பன் என்பவரை காதலித்து மணந்தார் ஷீபா. அவர் மூலம் அபர்ணா என்ற 4 வயதுப் பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையுடன்தான் தற்போது தற்கொலை செய்து கொண்டார் ஷீபா.
அய்யப்பனுக்கு, ஷீபாவை கல்யாணம் செய்த அடுத்த ஆண்டே வெளிநாட்டில் வேலை கிடைத்து போய் விட்டார். இதனால் தனிமையில் தள்ளப்பட்டார் ஷீபா. அக்கம்பக்கத்து வாலிபர்களிடம் அவர் பேசி வந்தார். இதுகுறித்து ஊருக்குள் ஒரு மாதிரியாக பேச்சு பரவியது. இதனால் தாயார் சிவக்குமாரி, மகள் ஷீபாவைக் கண்டித்துள்ளார். இதையடுத்தே ஷீபா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
முதலில் மகளுக்கு வாயில் விஷத்தை ஊற்றியுள்ளார் ஷீபா. அதன் பின்னர் தீக்குளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக