சனி, 15 செப்டம்பர், 2012

பவர் ஸ்டார் சீனிவாசன் 15 நாள் சிறையில் அடைப்பு!

 வங்கியில் பத்து கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 65 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் என்ற திரைப்பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். இவர் பிரபல மருத்துவராவார். கடந்த சில ஆண்டுகளாக லத்திகா பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். தான் தயாரித்த படங்களில் தானே ஹீரோவாக நடித்தும் வந்தார். சென்னையில் அரசியல் கட்சிகளுக்கு ஈடாக தண்ணீர் பந்தலை வைத்து பவர் ஸ்டார் தாகம் தீர்ப்பகம் என்ற பெயரில் பானைகளில் விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சினிமா உலகில் நுழைந்து ஐந்தே ஆண்டுகளில் அதிக அளவு விளம்பரம் கொடுத்து அசத்திய ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதுதான் சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மீத விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூபாய் 10 கோடி பணம் கேட்டு நண்பரை அணுகினார். நண்பர் பிஸ்னஸ் கன்சல்டிங் நடத்தி வரும் சினிமா ஸ்டார் பவர் ஸ்டார் சீனிவாசனை தெரியும் என்று கூறி, அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். அண்ணா நகரில் உள்ள பவர் ஸ்டார் அலுவலத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின்னர் பணபரிவர்த்தனை தொடர்பாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவர்ஸ்டார் வீட்டிற்கு நண்பருடன் பாலசுப்பிரமணியன் இரண்டு முறை சென்றார். அப்போது பாலசுப்பிரமணியனிடம் பேசிய பவர்ஸ்டார், சொத்து மதிப்பின் பேரில்தான் நான் பைனான்ஸ் செய்வது வழக்கம் என்று சொல்லி அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளார்.

பாலசுப்பிரமணியனும் ஆவணங்களை கொடுத்துள்ளார். அதன்பின்னர் உங்களுக்கு ரூ.10 கோடி கடனை ஒரு வாரத்தில் பெற்றுத்தருகிறேன். ஆனால் டாக்குமெண்ட் வெரிவிக்கேஷன் காரணமாக நீங்கள் ரூ.65 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே பாலசுப்பிரமணியமும் ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து பவார் ஸ்டாரை சந்திக்க அலுவலகம் சென்ற போது அவர் படப்பிடிப்பில் இருப்பதாக அலுவலக ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்பின் பாலசுப்பிரமணியம் அண்ணாநகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தொலைபேசியிலும்  தொடர்பு கொள்ள முடியவில்லை. வீடு, அலுவலகம், தொலைபேசி என்று மும்முனை போராட்டத்தை போராடி பார்த்துவிட்டு ஓய்ந்து போன பாலசுப்பிரமணியன் கடைசி முயற்சியாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேரில் சந்தித்தார்.

பவர்ஸ்டாரிடம் தான் ஏமாற்றம் அடைந்தது பற்றி மிக விரிவாக மூன்று பக்கத்துக்கு புகார் மனு கொடுத்தார். பணம் கைமாறியதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார்.

புகாரை பெற்ற கமிஷனர் துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். சீனிவாசன் பணம் பெற்ற இடம் பூந்தமல்- நெடுஞ்சாலை கிழ்ப்பாக்கம் பகுதியில் வருவதால், கீழ்ப்பாக்கம் போலீசார் இதுபற்றி விசாரிக்க கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று காலை பவர்ஸ்டாரை வீட்டில் இருந்து போலீசார் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர். பாலசுப்பிரமணியமும் வரவழைக்கப்பட்டார். இருவரையும் ஒன்றாக வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மூன்று மாதத்தில் பணத்தை திருப்பி கொடுக்கிறேன் என்று பவர்ஸ்டார் கெஞ்சி இருக்கிறார். 3 நாள் கூட அவகாசம் தரமாட்டேன் என்று புகார் கொடுத்தவர் மிஞ்சியிருக்கிறார். இன்று காலை ஆரம்பித்த விசாரணையானது பிற்பகல் 4 மணியை தாண்டி நீடித்தது. பவர்ஸ்டார் கைதாவாரா பணத்தை கொடுப்பாரா என்று இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். கீழ்ப்பாக்கம் போலீசார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் புரிந்துவிடும்.சில தினங்களுக்கு முன்பு, பிரபல நடிகை கோவை பவர்ஸ்டார் சீனிவாசனிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அப்போது உங்களுக்கு போட்டியாக சினிமா உலகில் யாரை கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த பவர்ஸ்டார், இந்த பவர்ஸ்டாருக்கு அந்த சூப்பர்ஸ்டார்தான் போட்டியாளராக இருக்க முடியும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இதுபோன்ற விசாரணைக்கு ஒருபோதும் சூப்பர் ஸ்டார் காவல்நிலையங்களில் கால் வைத்தது இல்லை என்பதை பவர்ஸ்டார் புரிந்துகொள்ள வேண்டும் என்று காவல்நிலையத்தில் இருந்த போலீசாரே அவரிடம் கூறியுள்ளனர் க்குபஞ்சர் டாக்டராக இருந்து சொந்த தயாரிப்பில் திரைக்குவந்தவர் சீனிவாசன். பவர் ஸ்டார் என தன்னை திரைப்படங்களில் அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர் நடித்து வெளிவந்த லத்திகா என்ற திரைப்படம் சென்னையில் ஒரு வருடம் அதிசயமாக ஓடியது. வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 65 லட்சம் பெற்றுக்கொண்டு, பல மாதங்கள் ஆகியும் கடன் தொகையையும் வாங்கித்தரவில்லை, கமிஷனையும் திருப்பி தரவில்லை என்று சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பாலசுப்புரமணியன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து 15 நாள் காவ-ல் புழல் சிறையில் பவர் ஸ்டார் அடைக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை: