லக்னோ: மத்திய அரசு அனுமதித்தாலும் உத்தரப்பிரதேசத்தில் சில்லரை
வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கப் போவதில்லை என்று அம்மாநில
முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசுக்கு தங்களது சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து ஆதரவளித்தாலும், கட்சி
மேலிடமானது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை
ஆதரிக்கவில்லை என்றார் அவர்.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் மாநில அரசுகள் இதில் இறுதி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் கேரளம், காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் சமாஜ்வாதி ஆளும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக