வெள்ளி, 14 செப்டம்பர், 2012

மாநில அரசு 40 ஏக்கர் நிலம் தானம்! கீத்திகா வழக்கில் சிக்கிய காண்டாவுக்கு


Viruvirupu
விமானப் பணிப்பெண் கீத்திகா ஷர்மா தற்கொலை வழக்கில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமறைவாகி, பின்பு கைதான முன்னாள் அமைச்சர் காண்டா, “வெளியே இருந்தாலும் ஆயிரம் பொன், சிறையில் இருந்தாலும் ஆயிரம் பொன்” ரகமான ஆள் போலிருக்கிறது!
அவர் ‘உள்ளே’ உள்ளபோதே, ஹரியானா அரசு அவரது நிறுவனத்துக்கு 40 ஏக்கர் ‘சூப்பர்’ நிலத்தை, கண்களை மூடிக்கொண்டு கொடுத்துள்ளது. ‘விவசாய நிலம்’ என்ற பிரிவில் இருந்து, ‘குடியிருப்பு நிலம்’ என்ற பிரிவுக்கு இந்த 40 ஏக்கர் நிலம் மாற்றப்பட்டுள்ளது.
அதன் அர்த்தம் புரிந்திருக்குமே… ஆம்! காண்டாவின் நிறுவனம் இந்த 40 ஏக்கரில் அப்பார்ட்மென்ட் மற்றும் வீடுகள் கட்டியோ, பிளாட் போட்டோ சுடச்சுட விற்க முடியும்!

இதில் மிகப்பெரிய தமாஷ் என்னவென்றால், விமானப்பணிப்பெண் கீத்திகா விவகாரத்தில் காண்டா தொடர்பு படுவதற்கு முன் கொடுக்கப்பட்ட டீல் அல்ல இது. காண்டா கைதாகி 11 நாட்களின்பின், அவர் குற்றவாளி என்று போலீஸ் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில், நிலத்தை தாரைவார்த்து கொடுத்துள்ளது மாநில அரசு.
குறிப்பிட்ட நிலம், காண்டாவின் பிசினெஸ் பார்ட்னர்கள் தேஜ் பிரகாஷ் பான்சல், நவ்நீத் குமார் ஆகியோர் டைரக்டர்களாக உள்ள ஷர்வ் ரியல்டோர் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ளது. இந்த நவ்நீத் குமாரும், முன்னாள் அமைச்சர் காண்டாவும், கிங் பில்ட்கோன் என்ற நிறுவனத்தின் பார்ட்னர்கள்.
காண்டாவும், தேஜ் பிரகாஷ் பான்சலும், விட்னஸ் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற மற்றொரு நிறுவனத்தின் பார்ட்னர்கள். இந்த இரு நிறுவனங்களின் சிஸ்டர் நிறுவனம்தான், 40 ஏக்கர் நிலம் பெற்ற ஷர்வ் ரியல்டோர்.
எப்படியொரு சாதுரியமான நிறுவன செட்டப் பார்த்தீர்களா? நம்ம அரசியல்வாதிகள் பிசிக்கலி உள்ளே இருந்தாலென்ன, வெளியே இருந்தாலென்ன, தலைக்கு உள்ளே மூளை இருக்கிறதா, இல்லையா?

கருத்துகள் இல்லை: