காப்பாற்றச் சென்று உயிர்துறந்த இலங்கை இளைஞர்!! பாரீஸில் சம்பவம்!!!
வியாழன் இரவு 8.30 மணியளவில் 7ம் இலக்க மெட்ரோ சேவையில் உள்ள Crime metro (Paris XIXme) நிலையத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணைத் தாக்கி விட்டு ஓட ஒரு இளைஞன் முயன்றுள்ளான். இளைஞனால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதற்காக அருகில் நின்றிருந்த இளைஞன் ஒருவர் முயன்றுள்ளார்.
ஆனால் திருட முயன்றவன் உதவிக்கு வந்த இளைஞனை மெட்ரே தண்டவாளத்தில் தள்ளி விழுத்தி விட்டான். கீழே விழுந்த இளைஞன் உடனடியாக தண்டவாளத்திலுள்ள அதிசக்கி வாய்ந்த மின்சாரம் தாக்கி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அந்த இடைவெளிக்குள் திருட வந்தவன் தப்பி ஓடிவிட்டான். கிட்டத்தட்ட 25வயதுடைய வட ஆபிரிக்க இளைஞன் ஒருவனே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவராவார். 1.75m முதல் 1.80m வரை உயரமுடைய இந்த இளைஞனைக் காவற்துறையினர் தீவிரமாகத் தேடுகின்றனர். தொடருந்து சிறப்புக் காவற்துறையினர் ( La brigade des rseaux ferrs ) இந்த விசாரணையைக் கையிலெடுத்துள்ளார்கள். திருட்டுச் செயலில் இறங்கிய இந்த இளைஞன் காப்பாற்ற வந்த இளைஞனைத் தள்ளி வீழ்த்திக் கொலைகாரனாக மாறியுள்ளான்.
இந்த சம்பவத்தில் பெண்ணிடம் கொள்ளையிட முயன்ற ஆபிரிக்க திருடனை தடுத்தி நிறுத்தி போராடி மரணத்தை தழுவியவர் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் என்றும் இவரது வயது 27 என்றும் இவர் பாரீஸ் la Courneuve இல் வசிப்பவர் என்றும் சனிக்கிழமை நாளிதழான Le parisien செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக