சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக், ஆப்பிள் கூட எங்களுக்குப் பெரும் மிரட்டல் இல்லை. ஆனால் மைக்ரோசாப்ட்டின் பிங் சர்ச் என்ஜின்தான் மிகப் பெரிய மிரட்டலாக உள்ளது என்று கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி எரிக் ஸ்மித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், ஆப்பிள் எங்களின் மதிப்புமிகு போட்டியாளராக உள்ளது. பேஸ்புக்கும் கூட சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட்டின் லேட்டஸ்ட் சர்ச் என்ஜின் பிங்தான் மிகப் பெரிய போட்டியாக தெரிகிறது. பிங் கூகுளின் மிக முக்கிய போட்டியாக கருதுகிறோம். மிகவும் போட்டியைக் கொடுக்கும் வகையில் பிங் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், பிங் சர்ச் என்ஜின் யாஹூவை முந்தி அமெரிக்காவின் 2வது பெரிய சர்ச் என்ஜின் என்ற இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் கூகுள் சற்று பீதியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக