புதன், 29 செப்டம்பர், 2010

காங்கிரஸில் சேருகிறார் அஜித்! பரபரக்கும் கோலிவுட்!!

Actor Ajith enters politics!
டிகர் அஜித் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய தகவல் ஒன்று கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியொன்றில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் ‌பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அஜித் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய செய்தியொன்று கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது. இதுபற்றி விசாரித்தால், அந்த தகவல் பொய்யானது இல்லை என்று தெரியவருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீப காலமாக அஜித்துக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். அதும் கட்சியில் பொதுச்செயலாளர் ராகுலிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை திரட்டுவதில் ஆர்வத்துடன் முக்கிய பங்காற்றி வரும் ராகுல், அஜித்திடம் போனில் பேசியதாகவும், ராகுல் சார்பில் சில காங்கிரஸ் பிரமுகர்கள் அஜித்தை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறுகிறது அந்த தகவல். ஆனாலும் அஜித் அரசியல் கட்சியில் சேரும் முடிவை இப்போதைக்கு எடுக்கவில்லை. பின்னாளில் தேர்தல் நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் (அதிமுகவா, காங்கிரஸா என்று) முடிவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் முத‌ல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜித், இதுபோன்ற விழாக்களுக்கு வருமாறு சிலர் மிரட்டுவதாக பகிரங்க குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள், பிரச்னைகளால் மிகவும் மன வேதனையடைந்த அஜித், முதல்வர் கருணாநிதியிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். அதன் பின்னரே சர்ச்சை சமரசத்துக்குள் வந்தது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை: