புதன், 29 செப்டம்பர், 2010

கூகுள் இணையதளத்தை பயன்படுத்துவதால் மூளையில் பாதிப்பு?

கூகுள் தேடல் இணையதளத்தில் உடனுக்குடன் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என, பிரிட்டனை சேர்ந்த ஆய்வு எழுத்தாளர் தெரிவித்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆய்வு எழுத்தாளர் நிக்கோலஸ். இவர் இணையதளங்கள் பார்ப்பதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து "தி ஷாலோஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் கூகுள் இணையதளத்தில் உடனுக்குடன் வரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: இணையதளங்களை பார்க்கும் போது நமது மூளை இயல்பை விட சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதனால் மூளையில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் இணையதளத்தில் தகவல் மற்றும் இணையதளங்களை தேடும் போது, அது நமது மூளையின் செயல்பாட்டை விஞ்சிய வேகத்தில் தகவல்களை தருவதால், பாதிப்புகளை உண்டாக்குகிறது. வாடிக்கையாளர் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்வேர் நிபுணர்கள் பல புதிய யுக்திகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகின்றனர். இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளங்களில் நாம் வேகமாக பணிகளை செய்ய முடிகிறது. ஆனால் அந்த அளவிற்கு மூளையும் வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுவதால் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. என்னை கவர்ந்த தேடுதல் இணையதளம் கூகுள். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளை கையாண்டு பயன்படுத்த வேண்டும். ஒரு எழுத்தின் அர்த்தத்தை வைத்து தேடி முடிவுகள் தெரிவிப்பதற்குள் அடுத்த முடிவுகளுக்கு செல்லும் அளவிற்கு கூகுள் இணையதளம் வேகமாக செயல்டுகிறது. இதுவே பாதிப்புகளுக்கு காரணம். இதேபோன்று செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜி.பி.எஸ்., வழிகாட்டும் தொழில்நுட்ப முறையும் மனித மூளையின் ஆற்றலை குறைக்கிறது. இவ்வாறு நிக்கோலஸ் கூறினார்.

கருத்துகள் இல்லை: