திங்கள், 27 செப்டம்பர், 2010

நக்சலைட்டு கைவசம் 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் உண்டு என்றால்

நக்சல் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீட்பு : வேட்டையில் 10 ஆயிரம் சதுர கி.மீ., கிடைத்ததுநக்சலைட்களை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினருக்கு குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும், நக்சல் கட்டுப்பாட்டில் இருந்த 10 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவை, பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட் அமைப்பின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள், நக்சலைட்களின்  கட்டுப்பாட்டில் உள்ளன. தினந்தோறும் வன்முறை சம்பவங்களை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில், நக்சலைட்களின் தாக்குதலில் 10 ஆயிரத்து 268 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக அளவாக கடந்தாண்டில் மட்டும் 2,372 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, கடந்தாண்டில் 362 தொலைத்தொடர்பு கோபுரங்கள், நக்சலைட்களால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டுள்ளன. ஏராளமான பள்ளிகள், சாலைகள் நக்சலைட்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சத்திஸ்கர் மாநிலத்தில் மட்டும் கடந்த ஏப்ரலில் இருந்து, இதுவரை நூறு போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் நக்சலைட்களின் சதித் திட்டத்தால் ரயில் விபத்தும் ஏற்பட்டது. இதில் 150 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.நக்சலைட்களின் அட்டூழியத்தை அடக்குவதற்காக, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நக்சலைட் ஒழிப்பு வேட்டையில் சம்பந்தபட்ட மாநிலங்களின்  போலீசாருடன், மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் கூட்டு முயற்சிக்கு, தற்போது குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி கிடைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நக்சலைட் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு, கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி கிடைத்துள்ளது. சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, பீகார் ஆகிய மாநிலங்களில், 40 ஆயிரம் ச.கி.மீ., பரப்பளவு பகுதிகள், நக்சலைட்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை நீடித்தது.தற்போது பாதுகாப்பு படையினர், தாக்குதலை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் 10 ஆயிரம் ச.கி.மீ., பரப்பளவை, நக்சலைட்களிடம் இருந்து மீட்டுள்ளனர்.மத்திய போலீசாருடன், மாநில போலீசார் இணைந்து செயல்பட்டதன் காரணமாகவும், சரியான நேரத்தில் உளவு தகவல்களை பகிர்ந்து கொண்டதன் காரணமாகவும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

சத்திஸ்கர் மாநிலத்தில் தான், அதிகமான பரப்பளவு கைப்பற்றப்பட்டுள்ளது.  அடுத்த சில மாதங்களில் நக்சலைட்களின் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் கணிசமான அளவு நிலப்பரப்பு மீட்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள டிரிலிபோஷி வனப் பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்களுக்கும்  இடையே கடந்த இரண்டு நாட்களாக  நடந்த கடும் சண்டையில்  ஐந்து பேர்  பலியாயினர். இதில் போலீசார்  மூன்று பேர்.
ஜெய் சங்கு - rak,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-27 10:17:00 IST
நக்சலைட்டு கைவசம் 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் உண்டு என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்....இது சுமார் கேரளா மாநிலத்தின் அளவை விடப்பெரியது (38 863 சகிமீ).... நம்ம நாட்ட நினச்சா பெருமையா இருக்கு...சீரும் சிறப்பும் கொண்ட இந்த அரசும் அரசியல்வாதியும் இருக்கும் போது யாருக்கும் கவலையே கிடையாது....எங்கே போய்கொண்டிருக்கிறது என் தாய் திருநாடு? கொதிக்கிறது என் ரத்தம்..!!! இடது தோளில் சீனாவின் நயவஞ்சகம்......வலது தோளில் பாகிஸ்தானின் கொலை வெறி.......இடக்கையில் அஸ்ஸாம் தீவிரவாதிகள் அட்டூழியம்..........இதயத்தில் மாவோயிஸ்ட்டுகள் கொடுக்கும் கார்டியோ அர்ரெஸ்ட்.....போதாத குறைக்கு ஊர்நாட்டாமை அல் கொய்தாவின் அச்சுறுத்தல்.....என்று என் தாய் திருநாட்டை கூறுபோடத்துடிக்கும் ஓநாயக்கூட்டதிடமிருந்து கடவுளே...!!! எங்களை காப்பாற்று...!!!!...
KA - Doha,இந்தியா
2010-09-27 09:26:46 IST
I do not belive this statistics may be a correct one....
சுமன் - Pudugai,இந்தியா
2010-09-27 08:04:18 IST
இவ்வளவு நாள் இந்த பகுதிகள் இந்திய வரை படத்திலேயே இல்லையா? நல்லா இருக்குங்க செய்தி, நம்ம நாட்டு தலைவர்கள் நாட்டை நடத்தும் விதம். பாரதத்தை காப்பாத்துங்க பிச்சுக்க போகுது....
வை. சுப்பாராவ் - singapore,இந்தியா
2010-09-27 06:11:15 IST
ஐயா ! ஐயா ! ஓட்டை வாயிலிருந்து உண்மை வெளியே வந்து விட்டது. இந்திய நாட்டில்,பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் இதுவராய் தெரிந்து வெளிநாட்டினர் அல்ல, நாக்சாலைட்டுகளின் சட்டதிட்டத்திற்குள் !!!...
ஜவஹர் சிங்கப்பூர் - singapore,இந்தியா
2010-09-27 05:25:20 IST
காவல்துறைக்கு எனது பாராட்டுகள்.முயற்சி செய்தால் வெற்றிநிச்சயம். தீவிரவாதம் என்றைக்கும் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை...
க.சந்திரசேகரன் - chennai,இந்தியா
2010-09-27 04:44:11 IST
i read computer malar yesterday at 1st time. it is very usefull & more powerfull. i downloaded previous issuses also. my all the doubts are cleared and learn more effetively. it's great plessure to thank you....
M .Balakrishnan - Chennai,இந்தியா
2010-09-27 02:31:44 IST
கையகபடுத்திய நிலங்களை எப்படி மீண்டும் விடாமல் பாதுகாப்பது? ஏதாவது காங்கிரஸ் காரர் பெயருக்கு பட்டா போட்டு விடுங்கள்....

கருத்துகள் இல்லை: