செவ்வாய், 28 செப்டம்பர், 2010

சினிமாக்களுக்கு தமிழில் பெயர் : தமிழக அரசு எச்சரிக்கை

"தங்கள் விருப்பத்துக்கு திரைப்படங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு, வரி விலக்கு கோரி பரிந்துரை செய்வது வழக்கமாகி வருவது வருத்தமளிக்கிறது' என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி முழுமையாக விலக்களிக்கப்படுமென முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். தமிழ் திரைப்படத் துறையினருடன் ஆலோசித்து அறிவித்ததற்கு இணங்க, தமிழ் மொழி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் படங்கள் தயாரித்தவர்கள், கேளிக்கை வரி விலக்கைப் பெற்று பயனடைந்தனர். இடையில் ஒரு சிலர் தங்கள் விருப்பத்துக்கு பெயர்களை வைத்துக் கொண்டு, அதுவும் தமிழ்தான் என்று வாதாடுவதும், வரிவிலக்கு கோரி பரிந்துரை செய்வதும், தற்போது வழக்கமாகி வருவதைக் கண்டு பெரிதும் வருந்துகிறோம். தொடக்கத்தில் அரசு விதித்த நிபந்தனைப்படி, எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெயரிடப்படாமல் வெளிவந்தால், அப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அரசு
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-09-28 07:05:07 IST
எனது பேரன்கள் எடுக்கும் படங்களுக்கு எந்த பெயர் வைத்தாலும் வரி விலக்கு உண்டு என்று நேரடியாக சொல்லிவிடுவதானே?...
ர.பழனிகுமார் - dindigul,இந்தியா
2010-09-28 07:00:47 IST
sorry எனக்கு கல்யாணமாயிடுச்சு, சிவாஜி தி பாஸ் இதெல்லாம் தமிழ் தலைப்புக்காக வரி விலக்கு பெற்ற படங்கள்....
மணி.வி - சென்னை,இந்தியா
2010-09-28 06:45:53 IST
வம்சம் என்பது எப்போது தமிழ்ச் சொல்லானது? 100 % வடமொழிச்சொல்தான்! யந்த்ரம் என்ற (வடமொழிச்சொல்) பொருளில் 'எந்திரன்(ROBOT )தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு எப்படி வரிவிலக்கு கொடுத்தார்கள்? பொறி என்பதுதானே சரியான தமிழ்ச்சொல்?படத்துக்கு Quarter Cutting எனப் பெயர் வைத்துவிட்டு அதனைப் பெரிதாகக் காட்டிவிட்டு, வரிவிலக்குக்காக 'வ' என சிறிதாக எழுதினால் வரிவிலக்கு! மஞ்சத்துண்டு வாரிசுப் படமாயிற்றே! இதுபோல் பல ஆங்கில, வடமொழித் தலைப்புப் படங்களுக்கு வரிவிலக்கு சரமாரியாகக் கொடுக்கப்படுகிறது. கேட்டால் 'பெயர்ச்சொல்' எந்த மொழியாயிருந்தாலும் விலக்கு!ஏன்? ஆளும் குடும்பத் தயாரிப்பு என்றால் எம்மொழிப் பெயராக இருந்தாலும் வரிவிலக்கா?இதனைப் பற்றி ஒரு ஊடகமும் கருத்தே சொல்வதில்லையே?...
வள்ளுவன் - சென்னை,இந்தியா
2010-09-28 06:42:20 IST
வ குவார்ட்டர் கட்டிங், என்னா தமிழ் பேரு!!! தமிழன் எவ்வளவு தரம் தாழ்ந்து உள்ளான் என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் இல்ல....
பிரபா - chennai,இந்தியா
2010-09-28 06:39:12 IST
சினிமா படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளரும் என்று பைத்தியக்காரன் கூட சொல்ல மாட்டான்...ஆனால் கருணாநிதிக்கு மட்டும் யோசனை உதிச்சிருக்கு... பேரை தமிழில் வைத்துவிட்டு டாடி, மம்மி வீட்டில் இல்லைன்னு பாட்டு வைக்கிறார்கள்... படம் முழுவதும் ஒரு சொல் கூட பிற மொழி சொல் இல்லாமல் இருக்க வேண்டும்..அப்படி இருந்தால் சலுகை கொடுக்கலாம்......
கஜானாகாலிபண்ணுவோர் - சென்னை,இந்தியா
2010-09-28 06:06:22 IST
தமிழில் படத்தின் பெயர்வைத்தால் தமிழ் வளரும் என்பது முட்டாள்தனத்தின் உச்சம் .இங்கே உயிரைக்கொடுத்து வேலைசெய்பவன் வரி கேட்டவேனும். கோடி கோடியாய் முதலீடு செய்து தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு. தமிழில் படத்தின் பெயர்வைப்பதால் எப்படி தமிழ் வளர்கிறது என்று சம்பந்தபட்டவர்கள் விளக்க வேண்டும்......
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-28 03:31:05 IST
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்..இதுதான் தீயசக்தி மைனாரிட்டி அரசுக்கு "மிகப்பெரிய கவலை தரும்" விஷயமாம்..இந்த சினிமாகாரர்களை தலையில் தூக்கிவைத்து ஆடும் இந்த மஞ்ச துண்டு, அவர்களுக்கு இலவச வீடு, தமிழ் பெயர் வைத்தால் சன்மானம் என்று வாரி வழங்குவது ஒன்றும் இவருடைய சொந்த பணம் அல்ல என்பதை புரிந்து கொள்ளுமா? உருப்படியாய் மின்சாரம் தர "வக்கில்லை"!! தமிழகமே இருண்டு போய் நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது..விலைவாசி விண்ணையும் தாண்டி சென்றுவிட்டது..வேலையில்லா திண்டாட்டமோ ராக்கெட் வேகத்தில் எகிறிவிட்டது..எல்லா இளைஞர்களையும் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட்டு அந்த பணத்தில் இலவசங்களை "ஒட்டு" ஒன்றையே குறியாய் வைத்து அள்ளி வீசுவது கேளிக்குரியாய் இருக்க, தண்ணீர் பிரச்சினை ஒவ்வோர் தமிழனின் தொண்டையை இறுக்குவது தெரியவில்லை.. பாலாறு பெரியாறு காவிரி எல்லாமே "பாலைவனமாய்" மாறுவது இவருக்கு பிரச்சினை இல்லை..கவலை கொல்கின்றாராம் "சினிமாவிற்கு" தமிழில் பெயர் வைத்து ஏமாற்றுகின்றனர் என்று..படுபாவிகளா என்றைக்கு தமிழனின் "பிரச்சினையை" கவனத்தில் கொண்டு "கவலை படபோகிண்றீர்களோ"...
வெங்கட் - கலிபோர்னியா,யூ.எஸ்.ஏ
2010-09-28 03:10:31 IST
தமிழ் படத்துக்கு தமிழ்லதான் பேரு வக்கனும்ன்னு சட்டம் போட வக்கில்லாத அரசாங்கம் ...... தமிழ்ல கடைக்கு பேரு வைத்தால் வரி விலக்கு கொடுக்குமா?...
abc - us,யூ.எஸ்.ஏ
2010-09-28 02:41:16 IST
ரொம்ப முக்கியம்... நடிக்கறவங்க எல்லாம் மும்பை இறக்குமதி...கடிச்சி குதறுகிற வார்த்தைகள் ...பாட்டெல்லாம் இங்கிலீஷ் வார்த்தை...பாப் மியூசிக்... ஷூட்டிங் எல்லாம் வெளிநாட்ல...படத்தோட பேர் மட்டும் தமிழ்ல ...தமிழ் ரொம்ப நல்லாவே வளந்துடும் வரி விலக்கு குடுத்தா......
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-28 02:23:48 IST
முதல்ல பெருசோட பேரனுங்கள அடக்கி வாசிக்க சொல்லுங்க. அப்றோம் மத்தவங்களுக்கு புத்திமதி சொல்லலாம்..."தமிழ் படம்" னு ஒரு படத்த எடுத்து எல்லாரையும் சகட்டு மேனிக்கு கிண்டல் பண்ணி கல்லா கட்டுன புண்ணியவானுங்க அவனுங்க . அந்த படத்துல ஒமாக சீயா ஒ மாஹா சீயா......நாக்க முக்க நாக்கா ஒ.... ரெண்டக்கா னு ஒரு பாட்டு வரும். அதுல வர வரி எல்லாம் செந்தமிழ் லா னு எனக்கு செம்மொழி ஆகிய தமிழ் மொழியின் தந்தையும், பகுத்தறிவு பகலவனாகிய பெருசு விளக்கம் அளிக்க வேண்டும். மத்தவங்கள கிண்டல் பண்ணி பண்ணியே அவனுங்க முதுகுல ஏறி சவ்வாரி செஞ்சி அவனுங்க பொழப்புல மண்ணள்ளி போட்டு எப்டி எல்லாம் டகால்டி வேலை பண்றானுங்க பாத்திங்களா ....என்ன ஒரு அடாவடித்தனம்........
குஞ்சுமணி - சென்னை,இந்தியா
2010-09-28 01:44:17 IST
மாமனாரின் இன்ப வெறி என்ற தலைப்பு வைத்து பள்ளிக்கூடம்,கோயில் அருகில் எல்லாம் போஸ்டர் ஒட்டினார்களே , இந்த மாதிரி தலைப்புக்கெல்லாம் வரி விலக்கு உண்டா ? டப்பிங் படமா இருந்தாலும் செந்தமிழில் தலைப்பு வைத்திருகிறார்களே...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-28 01:05:43 IST
ஏண்டா அப்போ கூட வருத்தபடுவீங்களே தவிர கண்டிக்க மாட்டீங்க, இல்ல. உங்களுக்கு வரிவிலக்கு எல்லாம் ஒன்னும் இல்ல, அவுத்து போட்டுட்டு ஆடுற உங்களுக்கு எதுக்கு வரிவிலக்கு, அதுக்கு பதிலா அந்த காசை கம்மா கரைல கரிஞ்சு போய் வேலை செய்யுறானே கந்தசாமி விவசாயி அவனுக்கு கொடுத்துக்கிறோம், நீங்க எல்லாம் மூடிக்கிட்டு போங்க ன்னு சொல்ல மாட்டீங்க இல்ல? ஆமா உங்க குடும்பத்து ஆளு க்வாட்டர் கட்டிங் ன்னு பேரு வெச்சுட்டு அப்புறம் சும்மா ஒரே எழுத்து வ அப்படின்னு டைட்டில் வெச்சுட்டு அதுக்கு கீழ சின்ன எழுத்துல க்வாட்டர் கட்டிங் ன்னு பேரு வெச்சு அதுக்கு வரி விலக்கு வாங்கிட்டு அதுக்கு நீங்க கூட குடும்பமா வாய இளிச்சுக்கிட்டு போனீங்களே, யார ஏமாத்துறீங்க. மக்களே, திருந்தி தொலைங்கடா. நம்மள நல்லா எமாத்துராங்கன்னு புரிஞ்சுகொங்கடா சனியன்களா. ங்கோ.... கருத்து சொல்ல கூட எரிச்சல்லா இருக்கு....
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-28 00:38:26 IST
இப்பதான் மஞ்சள் துண்டு தமிழை வளர்க்கிறார் என்று ஒத்து கொள்ளமுடிகிறது. கலாசார சீரழிவை ஏற்படுத்தும் சினிமாவுக்கு தமிழ் பெயர் வைத்தால் அரசு சலுகை. அதாவது அரசுக்கு சேரவேண்டிய, ஏழை மக்களுக்கு சேர வேண்டிய பல கோடி கேளிக்கை வரி ரத்து. ஆகா! எப்படி தமிழை வளர்க்கிறார் பாருங்கள் நம்ம மஞ்சள் துண்டு. இப்போ இந்த வரி ரத்தினால் பலன் பெறுவது மஞ்சள் துண்டி குடும்பம் மட்டுமே. ஏன்னா எல்லா பட கம்பனிகளும் இவர்களுக்கு அடிமை. இவர்களிடமே நான்கு பட கம்பனிகள் உள்ளது. இப்படி ஒரு தொலை நோக்கு திட்டத்தை மனதில் வைத்துதான் நான்கு வருடங்களுக்கு முன்னவே படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க சொன்னாரோ. வரியை ரத்து செய்தாரோ! அடிமைகளே போங்கள் போய் அனைத்து படங்களையும் கண்டு களியுங்கள். முடிந்தால் ஒரு படி மேலே போய் எல்லா தமிழ் படங்களும் வெற்றி பெற முட்டி போட்டு நடந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்....
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-28 00:18:19 IST
ஒரு புறம் மக்கள் அன்றாட பயன்படுத்தும் அத்தியவாசிய பொருட்களான பெட்ரோல், மளிகை சாமான்கள் உள்ளிட்டவைகளுக்கு ஆண்டுதோறும் வரிவிகிதத்தினை உயர்த்துதல்....மறுபுறம் சினிமா கிரிக்கெட் போன்ற கேளிக்கை விருந்துகளுக்கு வரி விலக்கு மற்றும் சலுகைகள்.....என்ன அருமையான பொருளாதார கொள்கை.........
பாலா சுப்பிரமணி - பிட்ஸ்பர்க்,யூ.எஸ்.ஏ
2010-09-28 00:15:00 IST
அடப்பாவிகளா,நல்ல வரி ஏய்ப்பு பண்றாங்க சினிமா காரங்க.பல பல கோடி போட்டு படம் எடுக்கிறவன் வரி கட்ட மாட்டானா? தமிழ் பேர சொல்லி ரொம்ப வரி எய்ப்பு நடக்குது.சினிமா காரங்களுக்கு தான் இந்த சலுகை....

கருத்துகள் இல்லை: