Imageவிஞ்ஞானிக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம் பாகிஸ்தான் விஞ்ஞானி ஆபியா சித்தீக்கிற்கு 86 வருட சிறைத்தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து பாகிஸ்தானில் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிளானி இது தொடர்பாக அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டுவரவூள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தினரை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேற்படி பாகிஸ்தானிய பெண் விஞ்ஞானிக்கு 86 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்படும் போது மோசமான குண்டுகளை தயாரிப்பதற்கான குறிப்புகளையூம் நியூயோர்க்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பட்டியலையூம் தன்னுடன் வைத்திருந்தார் எனவூம் கூறப்படுகிறது.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக்கெண்டதையடுத்தே தண்டனை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.