திங்கள், 27 செப்டம்பர், 2010

விலைபோகும் விருதுகள், பட்டங்கள் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். -26.09.10
அண்மையில்' தேசம்'' இணையத்தளத்தில் வந்த செய்தியின்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவாகளுக்குக் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கவிருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சமூகநலவாதிகள் அரசியலவாதிகள,; கலைஞர்கள் தத்துவஞானிகள்,ஆன்மீகவாதிகள் போன்றோருக்குப் பல்கலைக்கழகங்களால்  கௌரவ பட்டங்கள் கொடுப்பது உலகில் பல நாடுகளிலும் பரவலாக நடக்கும் விடயமாகும்.
பல்கலைக்கழகங்கள் என்பது 'பல கலைகளயும் பயின்று அறிவு முதிர்ச்சி பெறும் இடமாகும்.' சர்வகலாசாலை'யின் பாரம்பரியம், சமுதாயத்தின வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அந்தச் சமுதாயத்தின் அங்கத்தவனான தனி மனிதனின் வாழ்வின் வளத்துக்கும் கல்விமுறைகளைத் தரும்  சர்வகலைகளையும் சமத்துவத்துடன் கற்பிப்பதாகும்.; இதில் பேராசிரியர்களாக இருப்பவர்கள் தாங்கள் படிப்புக்கும் பாடத்தில் பாண்டித்தியமும் ஆராய்ச்சித் திறனும் கொண்டவர்களாக மதிக்கப் படுவர். பல்லாண்டுப்படிப்பின் அறிவுத்திறனும் ஆராய்ச்சி வல்லமையால் விளக்கப்பட்டு எழுதப்பட்ட பல புத்தகங்கள் கட்டுரைகளும் அந்தப் பல்கலைக்கழகப்பேராசிரியராக வருவதற்கான  வரைமுறைக்குப் படிவாசலாக அமைகின்றன.
ஆனால் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் 'கூத்தை;ப்பார்க்கும்போது ஒருகாலத்தில் மிகப் படித்த மேதைகளைப்பெற்றெடுத்தாகப் பெருமை பேசும் யாழ் மக்கள் மட்டுமல்ல உலகம் பரந்து வாழும் ஒட்டுமொத்தத் தமிழ் இனமும் வெட்கப் படவேண்டியிருக்கிறது
யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப்போராசிரியராகவிருந்த கைலாசபதி தமிழ்மொழிக்கும். துமிழ் உணர்வுக்கும் செய்த பணி உலகம் பரந்த பெருமையை யாழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்தது. இன்று அங்கிருந்த வெளிவரும் செய்திகளைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்திற்கு உன்ன சாபம் கிடைத்தது என்று சிந்திக்கத் தோன்றுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்ற முது மொழியைக் கொண்ட நாங்கள், சரியான அறிவுத் திறனற்ற, காமவெறி படித்த, வஞ்சகமும் சதிகளையும் கையாண்டு பதவிகளைப் பெறுபவர்களையும் அதைத் தக்க வைத்துக்கொள்ள 'யார் காலிலும் விழும்' முதகெலும்பற்றவர்களையுமா பிரமுகர்களாகப்போற்றகிறோம்?
பல்கலைக்கழகமா அல்லது பாலியல் வன்முறைக் கழகமா?
தேசம் கட்டுரையின்படி பல பேராசிரியர்கள் அங்கு படிக்கும் இளம் பெண்களைத் தங்களின் காமவெறிக்குப் பயன் படுத்துகிறார்கள்; என்ற உண்மையின் கடலளவு ஆழத்தின் ஒரு சிறு துளி வெளியிற் கொட்டப்படடிருக்கிறது.
 2005ம் ஆண்டு பொங்கு தமிழ் கணேசலிங்கம் தனது 13 வயது வேலைக்காரியை 40 தடவைகளுக்கு மேல்ப் பாலியற்கொடுமை செய்ததாக; என்ற குற்றச்சாட்டப் பட்டுக் கோர்ட்டுக்குப் போன விபரம் லண்டனை எட்டியபோது அதன் பின்னணி உண்மையை அறியத் தசவல்களைப் பெறமுயன்றபோது பாலியல் வன்முறைக்கு இளம் பெண்களைப் பலிகொள்ளும் பேராசிரியர்கள் பற்றிய பல விடயங்கள் வெளிவந்தன.

 விரிவுரையாளர்களுக்குப் பயந்து மாணவர்கள் தங்கள் ஆத்திரத்தை மொட்டைக்கடிதங்கள்மூலம் வெளிப்படுத்தியும் இவர்கள் அடங்குவதாகவில்லை. ''விரிவுரையாளர்களைத் தட்டிக்கேட்கும் மாணவர்கள் பழிவாங்கப் படுகிறார்கள்' என்று வலம்புரி பத்திரிகை குமுறியது. துமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் இணையத்தளம ஒன்று, விரிவுரையாளர்களால் விபச்சார விடுதியாக்கப்படும் யாழ் பல்கலைக்கழகம்' என்று சாடியது.
பல்கலைக்கழகத்தின ;பாலியக்கேவலங்கள் பரவலாகப்பேசப்பட்டாலும் அதைப்பற்றித் தட்டிக்கேட்கக்கூடிய அதிகாரத்திலுள்ள யாரும் பெரிதாக அலட்டிக்கொள்கிறார்களில்லை.  சமதாயத்துக்கெதிரான வன்முறைகளைத் தட்டிக்கேட்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளான உதயனும் வலம்புரியும கூடப் பல்கலைக் கழகத்தைப்பற்றிக் கண்டித்தும் அவர்கள் மிகவும் தான்தோன்றித்தனமாக நடப்பதாக் தெரிகிறது. இவர்களை இப்படி சட்டத்துக்க அப்பாற்பட்டவர்களாக நடக்க உந்தும் காரணிகள் என்ன? இவர்களுக்கு முதுகு சொறியும் அரசியற்தலைவர்கள் யார் என்ற கேள்வியைப் பொது மக்கள் வாய் திறந்து கேட்காவிட்டால் இந்த அநியாயங்கள் தொடரத்தான்போகிறது. முக்களுக்காப் பலகலைக்கழகங்களும் அரசியலவாதிகளும் பணி புரிய வேண்டுமே தவிர, முறைகெட்ட பல்கலைக்கழகப்பேராசிரியர்களுக்கும் அவர்களைத் தாங்கிப் படிக்கும் அரசியலவாதிகளுக்குமாக மக்கள வாழக்கூடாது.
அதிலும் முக்கியமாக , மக்களின் நம்பிக்கைக்கும் அவர்க்களின் எதிhகால வளர்ச்சிக்கும் பாதுகாவலான அரசியற் தலைவர்கள் இதில் முக்கிய கவனம் எடுக்க வெண்டும்
இன்று, யாழ்பல்கலைக்கழக உபவேந்தராகவிருக்கும் (உம்மா???) சண்முகலிங்கம் அவர்கள் அன்று , 2005ம் ஆண்டில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட கணேசலிங்கத்தையும் பல்கலைக்கழகத்தில் உள்வாங்கியிருக்கிறார். பாலியல் கொடுமை செய்தது பற்றிக் கேள்வியே இல்லை. வேலியே பயிரை மேயும் கதைகள் யாழ்பல்கலைக்கழகத்தில் நடப்பதை, படிப்பையே தெய்வமென மதிக்கும் யாழ் மக்கள் மவுனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதும், இப்படியாவர்களை இன்னும் இன்னும் முதன்மைப்படுத்துவது வெட்கக்கேடான விடயம் மட்டுமல்ல எதிர்கால இளம் தலைமுறைக்குச்செய்யும் படு துரோகமுமாகும்.
பல்கலைக்கழகத்தின் உயர்பதவிகளுக்கு அரசியல் உதவிகள் கொடுப்பது வளரும் நாடுகளில் நடக்கும் சாதாரணவிடயம் ஆனாலும் தராதரமற்ற, அரசியல் ஞானமற்ற, இராஜதந்திர நுணுக்கங்கள் தெரியாத தலைமைகளாhல் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் தமிழ் மக்களைத் தலை நிமிர வைக்கக்கூடிய தலைவர்களும் இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் தாங்க முடியாத வேதனையைத் தருகிறது..
அப்படியான ஆழமற்ற நோக்கற்ற அரசியற் போக்கு ஒரு சில அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வின் முடிவின் ஆரம்பமாகவிருக்கும் என்பது தவிர்க்கப் படக்கூடியதொன்றாகும் . அரசியற்தலைவன் என்பவன் , இன்று தனக்குக் கிடைக்கும இலாபத்தை மட்டும் யோசிக்காமல், தன்னைத் தெரிவு செய்த மக்களுக்கு, இன்றைக்கு, நாளைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் எதிர்காலத்திலும் என்ன வேவை என்று சிந்திக்கும் ஆற்றலுடையவனாக இருக்கவேண்டும். மக்களாற் தெரிவு செய்யப்பட்ட அரசியற் தலைவன் என்பவன் ஒவ்வொரு வினாடியும் மக்களின் பார்வை என்ற பூதக்கண்ணாடியால் பரிசோதிக்கப்படுபவனாகும். அவன், அவனைத் தெரிவு செய்த  மக்களால் எள்ளளவும் சந்தேகிக்க முடியாத வாழ்க்கையைக்கொண்டு நடத்த நிர்ணயிக்கப்பட்டிருக்கிறான். அரசியல் விளையாட்டின் ஒவ்வொரு சிக்கலையும் தெளிவாக முகம் கொடுக்கக்கூடியவனாக எதிர்பார்க்கப் படுகிறான். தனது தற்காலிக பெயருக்கும் புகழுக்கும் கேடு கெட்டவர்களின் முதுகு சொறியும் சின்னத்தனமான காரியங்களுக்கு அப்பாற்பட்டவனாக வாழ எதிர்பார்க்கப் படுகிறான்.
பனைமரத்தில் ஏற்றி விளையாடுபவர்கள்.
தங்கள் நலனுக்காகத் தலைவனைப் புகழ்பாடித் தலைவனை எமலோகம் அனுப்பிய பலரின் கதைகளைப்படித்தவர்கள் நாங்கள். பிரபாகரன் அவரைச் சுற்றியிருந்த சுயநலவாதிகளால் அழிந்து போனவர். அரசியல் சிந்தனையாளர்கள் பிரபாகரனை நெருங்கப் பிரபாகரனை வைத்துத் தமிழ் மக்களிடம்; பணவேட்டையாடிய  குள்ள நரிகள் விடவில்லை.
 பிரபாகரன் ஒரு தங்கக்கோழி, அதன் முட்டைகளை மூட்டையாக்கட்டிக் கோடிகள் சேர்த்தார்கள் சூரியக்கடவுளின் அவதாரம் என்றும், கார்த்திகைபாலன் என்றும் பிரபாகரனைப் புகழ்ந்து பனைமரத்தில் ஏற்றினார்கள். கடவுள் அவதாரக் கார்த்திகை பாலனுக்கு மகிந்தாவின் அசுரர்கள் வந்தபோது என்னமாதிரி இராஜதந்திரம் செய்N;தா அல்லது இராஜதந்திரமாக பேசியோ தப்புவது என்று சொல்லிக்கொடுக்க யாருமில்லை. பிரபாகரானால் பிடிக்கபட்டிருந்த போர்க்கைதிகளை விடுவிககும் அக்கறையில்-- (தமிழர்களில் அக்கறை, பிரபாகரனிலல்ல!) கொண்டவர்கள்(வெளிநாட்டுச்சக்திகள்) பிரபாகரனைக் காக்க முயன்றபோது தடைபோட்டவர்கள் இந்த சூனிய புத்திசாலிளே (இங்கே யாரைக்குறிப்பிடுகிறேன் என்று இதை வாசிப்பவர்களுக்குத் தெரியும்).
கடந்த நூற்றாண்டின் முக்கிய விடுதலைப்போரானாகப் பெயர்பெற்ற பிரபாகரன் அனாதைப் பிணமாகக்; கிடந்தபோது, அந்தப் பிணத்தைப் புதைக்கக்கூடப் பிரபாகரனின்பெயரில் பணம்சேர்த்தவர்களோ, விடுதலைப்போரைச்சாட்டி புகலிடம் தேடியவர்களோ முன்வரவில்லை. புலிகளின் அரசியல் ஆலோசகரான நடேசனுடன் அடிக்கடி பேசுவதாகப் பெருமையடித்துக்காண்ட (லண்டன்வாசி)  ஒருவரிடம்  பிரபாகரனின் நான போர்முறைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது, ஆனால் தமிழருக்காகப்போராடிய ஒரு தமிழனின் பிணம் அனாதையாகக் கிடக்கிறது, மனித உரிமையின்பேரில் பிரபாகரனுக்கு இறுதிச்சடங்கு செய்ய இலங்கை அரசுடன் தொடர்பு கொள்ளப்போகிறேன்; என்று நான் சொன்னபோது 'பேசாமல் இருங்கோ அக்கா' என்று சொல்லுமளவுக்கு ஒரு மனச்சாட்சி கெட்ட மனிதர்களதான் பிரபாகரனைத் தங்கள் தலைவனாகத் தூக்கிவைத்துக் கொண்டாடியவர்கள்.
இவர்களில் பலர் பஞசோந்திகள் என்பதும் தங்கள ;தேவைக்கு எவர் காலிலும் விழும் சுய நலவாதிகள் என்பதும் தமிழ் மக்களுக்குத் தெரியும். இன்று இன்னுமொரு தலைவனைத் தங்கள் தேவைக்குத் தூக்கி வைத்துக்கொண்டாடித் தங்கள்  காரியங்களைச்; சாதிக்க வலை பின்னுகிறார்கள் இந்த சந்தர்ப்ப வாதிகள்.
பதின் மூன்று தடவைகள் புலிகளின் கொலை வெறியிலிருந்து தப்பிய டக்ளஸ் இன்று புலியுருவைக் களைந்து விட்டு பல உருவங்களில் பஞ்சோந்திகளாக வளையம் வரும்  சிலரின் மாயாஜாலப் பேச்சுக்கு மயங்கி, அவர்கள் கொடுக்கும் கௌரவ பட்டத்தைப்பெற முன்வருவது, அவர் எவ்வளவு தூரம் தமிழ் மக்களின் உண்மையான வளர்சிசியில் அக்கறை வைத்திருக்கிறார் என்ற கேள்வியை எழுப்புகிறது.. அவர்;; இதுவரை பாதுகாத்து வைத்திருந்த 'முற்போக்கான' அரசியல் தமிழ் அமைச்சர்' என்ற பெயரைக் காற்றில் விடுவது ஆச்சரியமாகவிருக்கிறது;.
தேசம் கட்டுரையைப்படித்தபின் டக்ளஸைத் தொடர்பு கொள்ளப் பல தடவைகள் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. நீpண்டகால அனுபவமும் அரசியல் முதிர்சிசியுமுள்ள டக்ளஸ் இப்படியான 'பட்டங்களுக்கு' அப்பாற்பட்டவர் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். யார் பட்டம் கொடுக்கிறார்கள் என்பதில் அந்தப் பட்டத்தின் கண்ணியம், பெருமை, கௌரவம் பிரதிபலிக்கிறது.
மன்மத மகாராசாக்கள், பிராந்திய வெறிபிடித்தவர்கள், பதவிக்கு யார் காலிலும் விழும் முதுகெலும்பற்றவர்கள் சேர்ந்து கொடுக்கும் 'கௌரவ காலாநிதி (??????) பட்டத்தில் தன் சுய மரியாதையைக் காற்றில் பறக்கவிடவேண்டியதை விட மிகவும் முக்கியமான சமுதாயக் கடமைகளைத் தமிழ் மக்கள் டக்ளஸிடம் எதிர்பார்க்கிறார்கள். இன்று தமிழ்ப்பகுதிகளில் பொதுவெலை செய்யும் உத்தியோகத்தர்களின் ஊழல்வேலைகளால் தமிழச்சமுதாயத்தின் வளர்ச்சியே ஊனமாகவிருக்கிறது.
இதை நிவர்த்தி செய்யும் ஆற்றல் டக்ளசுக்கு உண்டு என்று ஒரு சாதாரண தமிழன் எதிர்பார்க்கிறான். ஊழல் நிறைந்தவர்கள் கொடுக்கும் எந்த விருதிலும் எந்த மதிப்பும் கிடைக்காது.
 டக்ளசுடன்  வேலைசெய்த மகேஸ்வரியைப் புலிகள் படுகொலை செய்தபோது (2008), இன்று டக்ளசுக்கு பொன்னாடை போர்க்கக் காத்திருக்கும் கூட்டத்தின் வெளிநாட்டு அடிவருடிகள் மகேஸ்வரிக்கு ஒரு இரங்கல் கூட்டத்தை லண்டனில் வைக்க  கோயிலில் (லுவி;ஷாம் சிவன் கோயில்) இடம் தரவில்லை என்பது மூலம் இவர்கள் யார் என்பது எதற்காகப் பட்டத்தைத் தந்து பாதாளத்தில் விழுத்த முயல்கிறார்கள் என்பதை டக்ளஸ் உணர்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.
 பிரித்தானிய மகாராணியாரால் சமுதாயத்துக்கு நன்மை செய்தவர்களுக்குக் கௌரவ பட்டம் கொடுப்பதுண்டு. அந்தப் பட்டம் ஏகாதிபத்தியத்தின் சின்னமாகக் கருதப் படுகிறது. பலர் அதைப் பெருமையுடன் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அப்பட்டத்தைப் பல சிந்தனையாளர்கள் ஏற்க மறுத்திருக்கிறார்கள். பிரபல படத்தயாரிப்பாளரான் அல்பிரட் ஹிச்சொக அப்பரிசை ஏற்க மறுத்தார் (ஆனால் அவர் இறக்க முதல் ஏற்றுக்கொண்டார்)  பரிசை வாங்கிய பீட்டல் பாடகர்களில் ஒருத்தரான ஜோன் லெனென் பரிசு வேண்டாம் என்று மகாராணியிடம் திருப்பிக்கொடுத்தார். தன்மானமும் சமுதாய உணர்வுக்கும் எந்தப் பரிசும் ஈடுதராது.
யாழ்பல்கலைக்கழகம் கொடு;க்க முற்பட்ட கௌரவ பட்டத்தை இலங்கையின் முற்போக்கு எழுத்தாளரான டொமினிக் ஜீPவா உதறித் தள்ளினார். உண்மையான கலைஞர்கள் அரசியல்வாதிகளினதோ அல்லது போலிப் பட்டதாரிகளிடமிருந்தோ அங்கிகாரம் பெறுவதில்i, அவர்களைச்  சட்டை செய்வதுமில்லை.
எமது சமகால இருக்கையை நியாயப்படுத்த கடந்த கால வரலாற்றைக்கொச்சைப் படுத்த விரும்பவில்லை'  'கற்றுக்கொண'ட அனுபவங்கள் புதிய வரலாற்றைப் பெற்றுத்தரும்' .- டக்ளஸ் தேவானந்தா செப்டம்பர் 2010.
டக்ளசில் நம்பிக்கையும் கொண்ட தமிழச்சமுதாயம் இந்த வாசகங்களைத் திருப்பிச் சொல்கிறது. மேதகு என்றும் கடவுள் அவதாரம் என்றும் புகழ்பாடிப் பிரபாகரனை அழித்த கூட்டம் இன்று யாரை அழிக்கக் கண் வைத்திருக்கிறது; என்பதைச் சொல்லத் தேவையிலலை; மக்கள் பண்pசெய்ய மாண்பு கெட்டோர் தரும் கௌரவப் பட்டம் தேவைதானா?
வாழ்க்கை என்பது கடவுளின் அனுக்கிகத்தால் நிர்ணயிக்கப் படுவதில்லை. வாழ்க்கை என்பது தொடர்பான மாற்றங்கள். பழைய வாழ்க்கையின் அனுபவங்கள் அல்லது நடந்தவை புதிய எதிர்காலத்தை உருவாக்குகிறது. இன்று தூக்கி வைப்பவர்கள் தூக்கி வைக்கப் படுபவர்கள் அந்த உயரத்தில் வாழ்க்கை முழக்க பறக்க முடியாது. போலிக்காரணங்களால் மக்களின நன்மதிப்பைப் பெறவும் முடியாது. தனது கடைசிக்காலத்தில் தன்னைக் காப்பாற்றச் சாதாரண ஏழைத் தமிழனைப் போர்க்கைதியாக்கி வைத்துக்கொண்டு 'எங்களைக் காப்பாற்ற அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா கப்பல் அனுப்புவார் பொறுத்திருங்கள் என்று புலிகள் சொன்னது போல் உயரப் பறக்க நினைத்து ஆழ்கடலில் விழும்போது தமிழ்ச்சமுதாயத்தின் தன்னலவாதிகளின் கூட்டம் ம் ஏறி மதிக்குமே தவிர எந்தக் கப்பலையும் கொண்டு வராது.
 சமுதாய நலத்தில் அக்கறை கொண்ட மாணவர்கள், ஊடகவாதிகள், பெற்றோர், பெண்ணிலைவாதிகள் என்போர் இந்தக் பல்கலைக்கழகக் கும்பலின் கேவலங்களை அம்பலப் படுத்தி அவர்களை  வீதிக்கு விரட்டி அடிக்கவேண்டுமே தவிர அவர்களின் விருதுகளில் மயங்கக்கூடாது. ஆவர்களின் இருப்பை நியாயப் படுத்தக் கூடாது. நோய்க்கு மருந்து கொடுக்கும்போது மருந்து கசக்கும் என்ற காரணத்தால் நோயாளிகளாகவிருப்பது முட்டாள்த்தனம்.
கடவுளுக்குததான் கோயில் கட்டுவது, கள்வர்களுக்கல்ல, பண்புக்கும் படிப்புக்கும்தான் பல்கலைக்கழகம் பாலியற் சேட்டைகளின் மேடையாகப் பாவிப்பதற்கல்ல

கருத்துகள் இல்லை: