விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம்
மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்:
ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.
* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.
ஆரோக்கிய எடை:
உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு "உயரம் (செ.மீ.,ல்) - 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.
மன நிம்மதி: மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது.இந்த 2010ம் ஆண்டில், "ஙிணிணூடு கடூச்ஞிஞு ஙிஞுடூடூணஞுண்ண்' என்பதே குறிக்கோள். அதாவது பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே அது.
* நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் "லிப்டை' உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது.
* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.
* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுந்தர் - Dindigul,இந்தியா
2010-09-26 18:13:05 IST
வெரி குட் நியூஸ் போர் ஆல் ஹுமான்ஸ் .தேங்க்ஸ்...
தமிழ் செல்வன் - ஜோஹோர்பஹ்ரு,மலேஷியா
2010-09-26 18:13:03 IST
இப்படி ஒரு அறிக்கையை பிரிண்ட் செய்து ஒவ்வொரு விட்டின் முன் புறத்தில் ஒட்ட வேண்டும் , ஒவ்வொரு சாப்பாட்டு கடைகளிலும் ஒட்ட வேண்டும். ஒவ்வொரு பள்ளி நோட்டு புத்தஹங்கழலில் ஓட்ட வேண்டும், வளருஹின்ற நமது பிள்ளைகள் கண்டிப்பா பின் பற்றுவார்கள் என நான் நம்புஹிறேன்...
கிருஷ்ணன் - சென்னை,இந்தியா
2010-09-26 17:43:43 IST
இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் புகைஇலை பழக்கத்தினால் மரணம் அடைகிறார்கள்.. தயவு செய்து அதை விட்டுடுங்க ப்ளீஸ்.....
RAM - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 17:31:16 IST
Really it's good and impart advise to all, from today we are all have to make a promise to follow it at least any of 5 out of 7....
H. Althaf - Doha,கத்தார்
2010-09-26 17:25:48 IST
For peaceful working atmosphere I should work with budha's follower....or In an Indian Government Job which is not pratical so please be practical...
சசிகலா - chennai,இந்தியா
2010-09-26 17:17:48 IST
இதை புரிந்து கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொள்வதும் இல்லை. அறிந்து நடப்பதும் இல்லை. தீய பழக்கங்களினால் தனக்கு மட்டும் அல்லாமல் தன் துணைக்கும் துன்பத்தை தேடி கொடுக்கிறார்கள். என்ன சொல்வது ?...
Gopi - Singapore,சிங்கப்பூர்
2010-09-26 16:38:13 IST
வெரி குட் டிப்ஸ்...
நாராயண் - singapore,சிங்கப்பூர்
2010-09-26 16:11:53 IST
மிக்க நன்றி தினமலரே இதை இங்கே வழங்கியதற்கு....
பொன்.ஐயம்பிள்ளை - சேலம்,இந்தியா
2010-09-26 15:53:29 IST
களைப்பு தீர்க்கவும், களியாட்டம் போடவும் உபயோகபடுத்தும் புகையும், மதுவும் எல்லா நாடுகளிலும் நல்ல வியாபாரம். இந்த வியாபாரத்திற்கு தடை போட முடியுமா. உலகளவில் எதை கட்டுபடுத்த முடியாதென்றால் இதய நோயையும் கட்டுபடுத்த முடியாது. ஊதுற சங்க ஊத வேண்டியது நம் கடமை. நல்ல கட்டுரை....
மேலூர் மனோகரன். - செந்துல்.கோலாலம்பூர்.மலேசியா.,இந்தியா
2010-09-26 15:37:55 IST
இதயத்தின் செயல்பாட்டை முழுமையாக எல்லோரும் தெரிந்துகொண்டால் உலகம் " அன்புடனும்...அமைதியுடனும்..." திகழும்...! உலகத்தில் மக்கள் " வேலை நிறுத்த போராட்டம் " செய்வதுபோல் இதயமும் உடலுடன் ஒத்துழைக்காமல் சில வினாடிகள் " வேலைநிறுத்த போராட்டம் " செய்தாலே போதும்...ஆடி அடங்கிவிடுவான் மனிதன்...! இது புரியாததால்தான் உலகில் மனிதன் " மதவெறி...இனவெறி...நிறவெறி..." பிடித்து அழிந்துகொண்டிருக்கிறான்...! இந்த இதயம் ஒன்றுதான் இந்த வெறிகள் இல்லாமல் " சமத்துவமாக" இயங்கிக்கொண்டிருக்கிறது...! மாண்புமிகு மக்களே...இதயத்தின் "இதயத்தை" புரிந்துகொள்ளுங்கள்...!...
HASIM - male,மாலத்தீவு
2010-09-26 15:34:44 IST
நன்றி தினமலர் , இது போன்ற நல்ல விசியங்களை வெளி விடவும்...
karthik - woodlands,சிங்கப்பூர்
2010-09-26 14:29:45 IST
yes............ we should takecare of our heart.........my heartfull thanks to dinamalar .........................
நலமா - சென்னை,இந்தியா
2010-09-26 14:11:43 IST
பீர் குடித்தால் இதய நோய் வருமா ???...
முருகப்ரகாஷ் v - Dindigul,இந்தியா
2010-09-26 14:09:43 IST
நல்லது. அருமையான விழிப்புணர்வு ஓடும் கட்டுரை. அனைவருக்கும் பொதுவான நலம் பயக்கும் விதமாக சொல்லி உள்ளீர்கள்.டி டோட்டள்ளர் என்பது ஒரு இனிமையான அனுபவம். அதையும் அனுபவித்து பார்க்கலாமே....
முஜீப் ரஹ்மான் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 14:04:13 IST
நல்ல கருத்து தேங்க்ஸ் தினமலர்...
viswanathan - RASELALKHAIMA,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 13:34:57 IST
நல்ல கருத்து.உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ப்புடியது.நீங்கள் கூறும் பழக்கவழக்கங்களை நான் கடைப்பிடித்து வருகிறேன். நான் சந்தோசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன் .இந்த கருத்தை ஏற்று அதன்படி நடக்க வேண்டும் என்று கூறுகிறேன். ....
செந்தில்குமார் - ஜுரிச்,சுவிட்சர்லாந்து
2010-09-26 13:27:00 IST
Really good article and I wish everyone to have good and smooth heart beat in this good day. Regards, Senthil...
சம்பத் - லண்டன்,இந்தியா
2010-09-26 13:13:24 IST
எனக்கு வயது 47 ஆகிறது இந்த கட்டுரையை படித்தது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி...
ப.கார்த்திகேயன் - சென்னை,இந்தியா
2010-09-26 13:08:31 IST
nichayam follow seivom....
செந்தில் - சென்னை,இந்தியா
2010-09-26 12:49:46 IST
எல்லோருக்கும் தேவையான ஒன்று .. நன்றி தினமலர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக