ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

PMK:என் சோக கதைய கேளு வன்னிகுலமே என் சோக கதைய கேளு காடு வெட்டி

அழைப்பு' வராததால் பா.ம.க., விரக்தி: பலத்தைக் காட்ட திட்டம்இந்தப் பக்கம் இருந்து அழைப்பு வருமா, அந்தப் பக்கம் இருந்து அழைப்பு வருமா' என, கோபாலபுரத்தையும், போயஸ் கார்டனையும் திரும்பி, திரும்பி பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்கும் பா.ம.க., தலைமை, வன்னியர் சங்கம் என்ற ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்து தங்களின் பலத்தைக் காட்ட ஆயத்தமாகி வருகிறது.

வன்னியர் சங்கத்தை, பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றியதில் இருந்து, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் அ.தி.மு.க., -தி.மு.க., என்று மாறி, மாறி சவாரி செய்து, அதிக இடங்களில் வெற்றி பெற்று, கட்சியின் "இமேஜை' உயர்த்தினார் ராமதாஸ். யார் அதிக "சீட்' தருகிறார்களோ, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது கட்சியின் வழக்கமாக இருக்கிறது.அதன்படி, கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க., லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு மாறி, போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. அதிர்ச்சியடைந்த பா.ம.க., அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, பென்னாகரம் இடைத்தேர்தலை தனியாக எதிர்கொண்டது. வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் களத்தில் குதித்தபோதும், இரண்டாம் இடம் கிடைத்ததை ஆறுதலாக நினைத்தனர்.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலையொட்டி, ஆளுங்கட்சியோ அல்லது அ.தி.மு.க.,வோ வலியுறுத்தி அழைப்பார்கள் என பா.ம.க., நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இரு கட்சிகளும் இதுவரை "சீண்டிப்' பார்க்கவில்லை. இதனால், கட்சியின் பலத்தை இரு கட்சிகளுக்கும் நிரூபித்துக் காட்ட, மீண்டும் "வன்னியர் சங்கம்' என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். இதில் கலந்து கொண்டு பேசும் தந்தையும், மகனும், "மாற்றுக் கட்சியில் இருக்கும் வன்னிய சமூக மக்களை மீண்டும் நம் பக்கம் கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களில், இரண்டரை கோடி மக்கள் வன்னியர்கள். ஆனால், இதுவரை வன்னியர் யாரும் தமிழகத்தை ஆளவில்லை. இந்நிலை மாற வேண்டும்' என கர்ஜித்து வருகின்றனர். தேர்தலுக்குள், தங்களது பலத்தைக் காட்டினால், கூட்டணிக்கு அழைப்பு வரும் என்பது பா.ம.க.,வின் கணக்காக இருக்கிறது
அப்துல் கதர் AL AIN - ALAINUAE,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 18:26:56 IST
என் சோக கதைய கேளு வன்னிகுலமே என் சோக கதைய கேளு காடு வெட்டி குலமே...
ஒக்கூர் Navabjohn - Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 18:19:11 IST
யானை தன தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட கதையாக்கீது. எப்படியோ,ஆளாளுக்கு ஜாதியை கையில் எடுத்துக்கொண்டு வோட்டு கேட்பது ஆரோக்கியமாஹா இல்லை....
RAM - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 18:09:09 IST
இனி வரும் தேறுதல்ல இருந்து எந்த கச்சியும் சாதி பெயர சொல்லியோ, எந்த ஒரு கச்சிகூடவும் கூட்டணி இல்லாம தனியவே தேறுதல்ல சந்திக வேண்ணும்னு ஒரு சட்டமும் கொண்டு வந்ததான் இந்திய கொஞ்சமாவது முன்னுக்கு வரும்... இல்லாடி நாம கடைசி வர இந்த அரசியல் வாதிகளுக்கு அடிமையதன் வாழ்ந்து மடிய வேண்டிவரும் .......
jvrayen - qatar,இந்தியா
2010-09-26 17:49:48 IST
ஐயா, ராமதாஸ் அவர்களே கலங்காதீர்கள். தங்கள் பலம் கலைஞருக்கும், பலவீனம் அம்மாவுக்கும் தெரியும்....
மனித நேயன் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 17:46:32 IST
அரசியலும் மருத்துவமும் நல்ல பிசினெஸ்தான் அதனால்.....................
வீரை முஸ்தபா LONDON - லண்டன்.UK,இந்தியா
2010-09-26 17:38:54 IST
ஏன் உமக்கு இந்த பொழப்பு, எதற்கு எடுத்தாலும் சாதி வளர்ச்சித்திட்டங்களை தடுத்து தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் செல்லுவதை தடுக்கும் பிற்போக்கு கும்பல் பாமக. சென்னைக்கு வரும் நவீன விமானத்தளத்தை தடுத்த செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். அவனவன் நவீன விமான நிலையம் வராதா என்று ஏங்கும்போது இநதக்கும்பல் அதைத்தடுத்து அரசியல் செய்கிறது.......
ரகு - london,யுனைடெட் கிங்டம்
2010-09-26 17:25:24 IST
கோடி ருபாய் பெட் கட்டுகிறேன் கருணாநிதி இவரை சேர்த்துக்கொள்வார். அரசியலில் சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் மக்கள் நலனைவிட மிகவும் முக்கியம். கருணாநிதிக்கு தான் தோற்றுவிடுவோம் என்று பயம் வரும்போது. கண்டிப்பாக காலில் விழுந்தாவது இவரை சேர்த்துக்கொள்வார். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா........
V.Karthikeyan - Hatyai,தாய்லாந்து
2010-09-26 17:03:01 IST
சாதி இல்லையடி பாப்பா என பாரதியார் குழந்தைகளுக்கு தான் சொல்லியிருகார் போலும் எனக்கில்லை என, இப்படி சாதி வெறியை தூண்டுகிறார்கள் இந்த மருத்துவர் அய்யா, தமிழ்நாட்டில் இரண்டரை கோடி நீங்கள் தான், அதற்காக தமிழ் நாட்டையே வன்னியர் நாடு என மாற்றவேண்டுமா என்ன, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் வன்னியர் மயமே. எங்களுக்கு சாதி வேண்டாம், உங்கள் ஆட்சியும் வேண்டாம், வன்னிய மக்களே தயவு செய்து இப்படி பட்டவர்கள் பின் செல்லாது, சுய சிந்தனையுடன் செயல் படுங்கள்....
வாசகர் - chennai,இந்தியா
2010-09-26 16:39:50 IST
வாசகர்களே சிக்கிட்டான் அடிமை சும்மா விடா திங்க உங்க கருத்தை தொடர்ந்து எழுதுங்க ........
mohamed - tanzania,இந்தியா
2010-09-26 16:31:21 IST
பத்து வருடம் மேலாக கஊட்டணி மாரி மாரி ஒட்டு போட்டவர்களை yematti பிழைத்து varum பா ம க tairiyamaka தனித்து potti இட்டால் மக்கள் edam மரியாதி கிடைக்கும்.யுன் அந்தஸ்து உயரும்....
தூர் வாசகர் - chennai,இந்தியா
2010-09-26 15:49:26 IST
இந்த திருட்டு கூட்டம் தொலைந்தால்தான் நம் நாடு செழிக்கும்.இந்த திருட்டு கூட்டம் எங்கு நின்றாலும் deposit கூட கிடைக்க கூடாது. அ.தி.மு.க.,தி.மு.க.,காங்கிரஸ் இம்மூன்று கட்சிகளும் இவர்களை சேர்க்காமல் இந்த கட்சியையும் இந்த திருட்டு கூட்டத்தையும் ஒழிக்க வேண்டும்....
sattu - மேட்டூர்dam,இந்தியா
2010-09-26 14:36:09 IST
வாழ்க பா ம க . வெற்றி நமக்கே ....
Senthil - Vedaranyam,இந்தியா
2010-09-26 14:27:57 IST
அழுகிய மாம்பழம் விலை போகுமா...
சபீர்அஹ்மத் - தம்மாம்,சவுதி அரேபியா
2010-09-26 14:03:35 IST
வாசகர்களின் எண்ணைகளை அப்படியே மரம்வேட்டிக்கு அனுப்பினால் மேன்மேலும் இப்படி பேசமாட்டான்...
வீரபாண்டியன் - chennai,இந்தியா
2010-09-26 13:59:08 IST
ராமதாஸ் அவர்களின் தற்போதைய நடவடிக்கை மிகச்சரியே. தென்மாவட்ட தேவர் இனத்தின் ஆதரவோடு,அவர்களுடன் இணைந்து பணியாற்றினால் அசுர பலத்தோடு அசைக்க முடியாத சக்தியாக இருப்பார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரட்டும். அணைத்து அரசியல் வாதிகளும் ராமதாஸ் பின்னால் தான் ஓடி வரவேண்டும்....
se - திண்டுகள்,இந்தியா
2010-09-26 13:27:35 IST
என்னது யாரும் கூட்டணிக்கு கூபிடலய ...... வெட்டுங்கட மரத்தே ..............
ராம் - மும்பை,இந்தியா
2010-09-26 13:25:00 IST
தேர்தல் வர்றதுக்குள்ள ஆடு வெட்டிக்கும் மரம் வெட்டிக்கும் பைத்தியமே புடிச்சிரப்ப்போவுதப்போய்....
சுந்தர் - ராஸ்லப்பன்,கத்தார்
2010-09-26 13:24:06 IST
ஐயோ ஐயோ ! எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது இவர நினைச்சு ! ஏம்பா இவர வச்சி யாரும் காமெடி கீமெடி பண்ணலியே ?...
நசீர் தென்காசி - தம்மாம்,இந்தியா
2010-09-26 13:17:46 IST
கடைசி காலத்துல அவரு பைய்யன ஒரு ஆஸ்பிடல கட்டி அதுல அவரு மகன் டாக்டர்ரும் இவரு மாத்திர கொடுக்கிற ஆளா இருக்க சொல்லுங்க அரசியல் வேண்டாம் இனி அவருக்கு ஆப்பு தான் அரசியலுக்கு வந்தா. உஷார் முதலாளி உஷார்...
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
2010-09-26 13:16:07 IST
This filth has to removed.He is a very dangerous weed. Any political activist using cast should jailed for life. Vanniear communite be unite and help tamilnadu progress, dont fall into this guys cast provacation. we will fall back in time...
ராஜா - Madurai,இந்தியா
2010-09-26 12:59:50 IST
மக்கள் இன்னுமா இந்த பச்சோந்தி மனிதனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை ....
பாலமுருகன் - விருத்தாசலம்,இந்தியா
2010-09-26 12:11:34 IST
தினமலர் வாசகர்களே இந்த சாதி வெறியர் திருந்த மாட்டார். ஆசிரியர் தயவுசெய்து வாசகர் கருத்தை பிரிண்ட் செய்து அய்யா, சின்ன அய்யா, சின்னம்மா, அண்ணி மற்றும் அய்யா குடும்பத்தினர் அனைவருக்கும் தபாலில் அனுப்பவும். மானத்தோடு வாழ அறிவுரை சொல்லவும் . இப்படியும் ஒரு பொழப்பா? வேற தொழில் செய்யலாம்....
Paris EJILAN - Paris,பிரான்ஸ்
2010-09-26 12:09:41 IST
NEVER SHOW MERCY TO THIS மரவெட்டி. HE IS A DANGER TO THE UNITY OF TAMILNADU. IF ALLOWED TO WIN CONSIDERABLE SEATS IN THE NEXT ELECTION THIS EVIL FORCE WILL SURELY DEMAND A SPERATE STATE "VANIYARLAND"....
அபுதய்மயா - தம்மம்,சவுதி அரேபியா
2010-09-26 11:51:17 IST
பிசைகரனுக்கு அழைப்பு கிட்டியா பிச்சை எடுக்க போறான்..அய்யா டாக்டர் நீங்க தான் தெருவோடு ஏந்திக்கொண்டு போகணும்.. சீக்கிரம் பழஞ்சோறு தீரப்போகுது ...ஹ ஹ ஹ...
S.Bhagrudeen - Riyadh.SaudiArabia,இந்தியா
2010-09-26 11:20:19 IST
கருணாநிதியும் ஜெயலலிதாவும் இவரை தேர்தலில் சேர்த்து கொள்ளா விட்டால் இந்த தேர்தலுடன் பா ம க இருக்காது.தமிழ் நாட்டுக்கும் அது தான் நல்லது.... அய்யாவும் அம்மாவும் யோசிபார்களா ?...
sachin - சென்னை,இந்தியா
2010-09-26 11:14:57 IST
ஜாதி தவிர்த்து இவருக்கு ஒண்ணுமே தெரியாது. மரத்த வச்சவன் தண்ணி ஊதுவான் மரத்த வெட்டுனவன் கண்ணீர் வடிப்பான். போகும் பொது அப்படியே கார்த்திக் கிருஷ்ணசாமி வைகோ எல்லோரையும் கூடு போங்க தமிழ் நாடு தப்பிக்கும். தனிய நின்னு டிபோசிட் வாங்க பாருங்க. அனாலும் இவரு எப்டியும் யார்கூடும் ஒட்டிகுவாறு...
சாமி - MUSCAT,ஓமன்
2010-09-26 10:52:38 IST
பொதுவாகவே பார்த்தால் இவரோட மக்கள் டிவி நல்ல நல்ல செய்திகளை ஒழி பரப்புகிறார்கள், ஆனால் இவர் என்றைக்கு காடு வெட்டி குருவை கட்சியில் சேர்த்தாரோ அன்றே கதை முடிந்தது...
ம.தியாகராஜன் - மும்பை,இந்தியா
2010-09-26 10:40:04 IST
திமுக விசுவாசிகள் கவலிப்பட அவசியம் இல்லை. நமது திருக்குவளை தீயசக்தி வெறும் காங்கிரஸ் கூட்டணியை நம்பி இந்த தேர்தலில் இறங்க மாட்டார் கண்டிப்பாக ராமதாசை தன வசம் இழுத்து கொள்வார்...
குருவி.. - Canada,கனடா
2010-09-26 10:30:35 IST
குருவி.. கூ...கூ... உனக்கு இதெல்லாம் ஒரு பொழப்பு..! உன் சாதிய மட்டும் வச்சு பொழப்பு நடத்திறியே..! உனக்கே இது ஓவரா தெரியல..! நீயும் உன் குடும்பமும் இந்த கட்சிய வச்சி நல்லாதான் வளந்திட்டீங்க..! மத்த வன்னியர்களுக்காக என்ன செஞ்சி சாதிச்சிட்டீங்க..! இந்த தேர்தல உனக்கு சங்கு தாண்டி ஓ..! குருவி கூ.. கூ.. !...
தவசீலன் - கோல்ஹாபூர்மகாராஷ்டிரா,இந்தியா
2010-09-26 10:22:34 IST
இங்கு கருத்து தெரிவித்துல நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் வணக்கம், நான் ஒரு வன்னியன், ராமதாஸ் கட்சியை முதலில் சரியான பாதையில்தான் கொண்டு சென்றார். ஆனால் இடையில் தன் சுயநலத்திற்காக பாதை மாறிவிட்டார். அதனால்தான் அவருக்கு இந்த நிலை. எம் வன்னிய சொந்தங்கள் அவரை எந்நாளும் கைவிட்டதில்லை, ஆனால் அவரோ எம் வன்னிய சொந்தங்களை கைவிட்டுவிட்டார் அதனால்தான் வன்னிய சொந்தங்களும் அவரை கைவிட்டுவிட்டனர். ஆகவேதான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் இப்பொழுது மீண்டும் வன்னிய சொந்தங்களை தேடி வருகிறார். ஆனால் எம் மக்கள் அவரை முன்புபோல் ஆதரிப்பார்களா?. அல்லது புறக்கநிப்பர்களா?. என்று பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும், நன்றி....
narandran - போர்ட்சைட்,எகிப்து
2010-09-26 09:58:52 IST
இந்த கட்சியோட கொள்கைஎ யாரு அதிஹ சீட் தரொங்கலோ அங்க தான் போகும் இந்த பாதை.......திருந்துங்கபா........
சண்முகம் - குவைத்,குவைத்
2010-09-26 09:57:18 IST
அறிவு ஜிவிகலே ஜெயலலிதாவும் கருணாநிதியும் என்ன மகாத்மாவா ஐயா ராமதாஸ் ரியல் ஹீரோ தாண்டா இல்லன்ன கஷ்டப்பட்டு இந்த அரசியல் சாக்கடையில் முழ்கி வன்னியருக்கு MBC என்ற முத்தை எங்களுக்கு வாங்கி கொடுதிருபாரா?...
மல்லேச்வரன் - ஆம்பூர்,இந்தியா
2010-09-26 09:54:05 IST
CHENNAI AIRPORT EXPANSION PREVENTED BY THIS PARTY PMK IS UN DIGESTABLE. ONLY THEY DOING FOR POLITICAL DRAMA NOT FOR OTHER PURPOSE. BUT THEIR DEMAND OF CLOSING TASMAC IS GOOD SUGGESTION....
ஜெரோம் - Nagercoil,இந்தியா
2010-09-26 09:46:01 IST
நாட்டுக்கு ரெம்ப முக்கியம் விடுங்க அவரு வைத்தியம் பண்ணி பிளிகட்டும் -...
பாலாஜி - singapore,இந்தியா
2010-09-26 09:43:13 IST
ramadoss your are no 1 criminal,who are you to leed vaniyar,wt you did for vaniyar,you make good money in the name of vaniyar caste,for your selfish you are trying to split vaniyar with other community,dont play foolish and dirty game its not good for the country and you and your family. Onecs people start oppose your family wt ever u so for made its waste. Be a good politician and try to maintain good ethics. balaji...
தமிழ்பிரியன் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-26 09:39:07 IST
நீ ஒரு ஜோக்கருனு எல்லாருக்கும் தெரியும் ஏன் இருந்துட்டு அல மோதுற இரு இரு அவங்களுக்கு இப்ப ஜோக்கர் தேவை படல எப்போ தேவை படுருதோ அப்ப உன்னை கூப்பிட்டுக்குவங்க உன்னால எந்த புரியோசனமும் இல்ல இரு இரு அவங்களுக்கு எப்ப ஜோக்கர் தேவை படுருதோ அப்ப கூப்பிட்டுக்குவங்க ......
கோமாளி - இந்திய,இந்தியா
2010-09-26 09:34:45 IST
கருணாநதி , ஜெயா . நீங்கள் இவளோ காலம் அரசியல்லில் இருந்து மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் , இந்த ஆளை சேர்க்க வேண்டாம் . மரம் வெட்டி கோவிந்தா கோவிந்தா தான்...
செல்வா - Bangalore,இந்தியா
2010-09-26 09:23:30 IST
விஜய காந்த இஸ் தி பெஸ்ட் பர்த்நேர்....
Ramesh - Delhi,இந்தியா
2010-09-26 09:10:50 IST
ஜாதி வெரி பிடித்த கட்சி ...தனித்து நில் பார்க்கலாம் ...தேபோசிட் கெடைக்குமா பார்க்கலாம் ..ஹிஹிஹி...
sunniyappan - சுன்னிதெரு,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 09:05:42 IST
ஹலோ ராம்தாஸ் சார் முதலில் ஜாதியை மறந்து நாம் எல்லோரும் ஒரு இனம் என்று உன் மனதில் நினைகிரயோ அன்றுதான் உன்னை மனிதர்கள் மதிப்பார்கள்....
Murugan - johor,மலேஷியா
2010-09-26 09:04:21 IST
என்ன கொடுமை என்னோமோ திராவிட கட்சிகள் எல்லாம் மக்கள் சேவை செய்வது போலவும் மருத்துவர் மட்டும் வெகு ஜன துவேஷம் செய்வது போலவும் இங்கே அவர்கள் தங்கள் `கருத்துகளை அள்ளி வீசி உள்ளார்கள் பாவம், இவர்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள் தமிழகத்தின் எல்லா துறையையும் கபளீக்கரம் செய்து கொண்டிருப்பது தெரியவில்லை போலும் பாவம். காங்கிரஸ் செய்தா கூட்டனிய என்ன ??? மர்துவரவத் டாக்டர் endra தொழில் செய்தார். மு க சினிமாவில் என்ன கோடி கோடிய சம்பாதித்தார். பத்து ஆண்டுகல்ல்கு முன் மு க வின் குடும்ப சொத்து என்ன? இப்போது???? இதை பற்றி யாரும்கும் கவலை இல்லியா இல்லை எழுதுவதற்கு பயமா??...
புலவர் - trichy,இந்தியா
2010-09-26 08:58:28 IST
டியர் லார்ட் லபக்கு தாஸ் ஓ சாரி சாரி ராமதாஸ் நீங்க ரெஸ்ட் எடுக்கும் காலம் வந்து விட்டது. என்ன முக்கினாலும் நடக்காது போங்க.......................
அபுதாபி கைப்புள்ள - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 08:56:44 IST
"பாடி ஸ்ட்ராங்கு ஆனா பசெமென்ட் வீக்கு " வடிவேலு காமடி தான் உங்கள் கதை. நோ use பொட்டிய கட்டி ஊருக்கு கிளம்ப்ரீன்களா ராசா.........
kulasekar - kualalumpur,மலேஷியா
2010-09-26 08:41:15 IST
கருணாநிதி கலைஞர் அவர்களே அம்மா ஜெயா அவர்களே தயவு செய்து ராமதாஸ் குட எந்த கஊடனியும் வைகதிங்க நாட்டுக்கு nallathu...
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-09-26 08:12:13 IST
மாம்பழத்தை கல்லு வைத்து பழுக்க வைத்தால் கதி இப்படி தான். மக்களிடம் ஹெல்த் விழிப்புணர்வு வந்துவிட்டது....
லோடுக்கு பாண்டி - கள்ளகுறிச்சி,இந்தியா
2010-09-26 08:05:21 IST
ஏங்கே செல்லும் இந்த பாதை, யாரொ யாரொ அரிவா? காலம் காலம் சொல்ல வேண்டும், யாரொ உன்மை அரிவா? நேரதிலே நான் ஊர் செல்லவேண்டும் வழி பொக துனையா அன்பே வாராயோ?...
விஜய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-26 07:59:53 IST
இந்த ஆளு ஒரு பச்சோந்தி ஜாதி பேரை சொல்லி எல்லோரும் கிளம்பினால் நாடு என்னவாகும்? ராமதாஸ் மடத்தனமாக யோசிக்காதே மக்களை பற்றி யோசி உன்னயெல்லாம் யாரு அரசியலுக்கு வரசொன்னது. பேசாம போய் விறகு வெட்டு....
rajagopal - trichy,இந்தியா
2010-09-26 07:49:45 IST
வளர்ச்சித்திட்டங்களை தடுத்து தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் செல்லுவதை தடுக்கும் பிற்போக்கு கும்பல் பாமக. சென்னைக்கு வரும் நவீன விமானத்தளத்தை தடுத்த செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். அவனவன் நவீன விமான நிலையம் வராதா என்று ஏங்கும்போது இநதக்கும்பல் அதைத்தடுத்து அரசியல் செய்கிறது....
ராஜ் - புனே,இந்தியா
2010-09-26 07:39:26 IST
அரசன் அன்று கொல்வான் ....மரங்கள் நின்று கொள்ளும் .....................
chinnachittukuruvi - delhi,இந்தியா
2010-09-26 07:29:21 IST
என்ன கொடுமை பார்த்தீங்களா?. திமுகவில் உங்களுக்கு ஆப்பு. அதே போல் அதிமுகவிலும் ஆப்பு. ஏன் உமக்கு இந்த பொழப்பு, எதற்கு எடுத்தாலும் சாதி, இதை தவிர உமக்கு என்ன தெரியும். தலைகீழாக நின்னு தண்ணி குடித்தாலும் மரம் வெட்டி கும்பலுக்கு இப்போ யாரும் கூட்டணிக்கு அழைக்க போவது இல்லை. நல்ல புள்ளயா ஒரு இடத்துல இருக்கணும். சும்மா இங்க கொஞ்ச நாளு அங்க கொஞ்ச நாளுன்ன இப்படிதான்....
கிராமத்தான் - சிங்கபூர்,சிங்கப்பூர்
2010-09-26 07:25:59 IST
போராட்டத்தின் மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் "எங்கள் உரிமையை" பெற்றோம், அரசியல் சதிராட்டத்தில் காய் நகர்த்தி அரசியலிலும் "எங்கள் உரிமையை" பெற்றோம், இனியும் பெறுவோம். போராடி பெற வக்கில்லாமல் எங்களை கண்டு பொறாமை கொள்ளும் போக்கதவர்களே, பொறுத்திருந்து பாருங்கள், காலசக்கரம் நிச்சயம் சுழலும், வன்னியன் பெருமை உலகம் அறியும்....
stm - singapore,சிங்கப்பூர்
2010-09-26 07:06:29 IST
ராமதாஸ் ஐயா பேசாமல் இருந்தாலும் நம்ம சிறப்பு நிருபர் சும்மா விடமாட்டார் போலிருக்கிறதே...........
nandhu - tambaram,இந்தியா
2010-09-26 06:55:44 IST
ராமதாஸ் அவர்களே! அலைகள் ஓய்வதில்லை புகழ் கார்த்திக் கூட உங்களை கூப்பிட மாட்டார்! நீங்கள் இனி அரசியலில் அம்போதான்!...
பாலாஜி - புதுடில்லி,இந்தியா
2010-09-26 06:47:38 IST
மதிப்பிற்குரிய பதிப்பாளரே!! நீங்க ப.ம.க பற்றிய செய்திகள் வெளியிடுவதே வாசகர்களை குஷி படுத்த தான் என்பது உலகறிந்த உண்மை.. 2 நாட்களுக்கு ஒரு முறை செய்தி வந்தாக வேண்டும்.. ஆனால் இன்று தமிழ் 'குடி' தாங்கி மருத்துவர் சு.ராமதாசு பேட்டியே விடவில்லை என்பதற்காக நீங்களே ஸ்பெஷல் ரிப்போர்ட் என தயார் செய்து விட்டர்கள்.. பாராட்டுக்கள்.. இன்னும் அவரது பேட்டி இருந்தால் இன்றைய கமெண்ட்ஸ் படிக்க நன்றாக இருக்கும்.. ஞாயிறு பொழுது நன்றே கழியும்!!...
ji.pannadai pandian - wuxi,சீனா
2010-09-26 06:13:41 IST
கருணாநிதி திருக்குவளை தீய சக்தி என்றால் மருத்துவர் திண்டிவனம் தீய சக்தி. இவருடைய குணாதிசயங்கள் திருக்குவளையோடு ஒத்து போகிறது; அதனால் இவர் அங்குதான் ஐக்கியமாவார். இதில் ஒன்றும் சந்தேகமில்லை. அனால் ஒன்று - இவர் தன் சமுதாயத்துக்கு நடத்தும் வழி காட்டுதலாகட்டும், இவரின் மக்கள் டிவி ஆகட்டும், இவரின் மத்திய மந்திரிகளின் செயல் பாடுகளாகட்டும், யாவும் மற்ற கட்சிகளை விட மிகவும் nandraagave இருந்தது, இருக்கிறது. இவர் தன் சொந்த காலில் நிற்க வேண்டும். மற்ற சமுதாயங்களின் நட்பையும் பெற்று மற்ற கட்சிகளை உதறிவிட்டு ஒரு 10 ஆண்டுகள் இப்போது செல்கின்ற பாதையில் சென்றால் நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால் அதற்குள் தாக்கு பிடிக்க முடியாமல் கரைந்து விடுவாரோ ???...
சேகரன் - singapore,சிங்கப்பூர்
2010-09-26 06:00:05 IST
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர் 2010-09-26 01:57:58 IST என்பவருக்கு என்ன சொல்கிறோம் என்பதே அவருக்கே புரியவில்லை. இப்போ ராமதாஸ் நல்லவரு என்கிறாரா ஜாதிவெறி பிடித்தவர் என்கிறாரா அல்லது அரசியல் வியாபாரி என்கிறாரா என்னமோ ஜெயலலிதாவிடம் சேர்ந்தால் நல்லவர் போலவும் கருணாநிதியிடம் சேர்ந்தால் அயோக்கியன் போலவும் கருத்து தெரிவிக்கிறார். குடும்பம் உள்ளவர்கள் குடும்ப உறுப்பினர்களை முன்னிலை படுத்துகிறார்கள். குடும்பம் என்றால் என்ன தெரியாதவர்கள் இப்போ யாரோடு இணைந்து வாழ்கிறார்களோ அவர்களுடைய குடும்பத்தை முன்னிலை படுத்துகிறார்கள் என்பதே உண்மை. தினகரன் மகாதேவன் சுதாகரன் வெங்கடேஷ் எல்லாம் யாரு?...
கமல் - அமெரிக்கா,இந்தியா
2010-09-26 05:34:36 IST
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-26 01:57:58 IST
மருத்துவரை "குறைத்து" மதிப்பிடாதீர்கள். கடைசி நிமிடத்தில் "காலில்" விழுந்தாவது ஏதேனும் "க" வில் சீட்டுகளை உறுதிபடுத்தி சகோதரி,, அல்லது சகோதரன் என்கிற ஆழாமான உன்னதமான "உறவை" உருவாக்கும் "பலே கில்லாடி" என்பதை காணத்தானே போகின்றீர்கள். இவர் என்றுமே ஒரு அரசியல் "வியாபாரிதான்". பாவம் அந்த "சனங்கள்" இவரை போய் நம்பி பின்னால் செல்கின்றனரே என்றுதான் கவலை கொள்கின்றேன்.அம்மாவின் பின் சென்றால் இந்த "வன்னிய" சனங்கள் நிச்சயம் அவர்கள் தம் வாழ்விலே நல்ல ஒரு முன்னேற்றத்தை காண்பர். தனது மகன், தனது மருமகள், இப்படித்தான் தனது கட்சியை நடத்தி வருகின்றார் திமுக குடும்ப கட்சிபோல..சாதீ என்கிற ஒரு "ஆயுதத்தை" நம்பி களத்தில் குதித்து "குளிர்"காய்ந்து அதிலே "சுகம்" கண்டுகொண்டதால் "ஏமாற்றி"பிழைப்பை நடத்துகின்றோம் என்கிற நிலையில் அவர் உணர்ந்து அரசியல் நடத்துகின்றார். என்ன சொந்த சாதி சனம் என்று கூட பார்க்க மாட்டேன்கின்றார் என்கிற வருத்தம் "எனக்கு" இருக்கின்றது.....
ரமேஷ் செல்வா - ராமுதேவன்பட்டிவிருதுநகர்தமிழ்நாடு,இந்தியா
2010-09-26 01:39:14 IST
என்னையா நீங்க சிரிப்பு குடும்பமா ? தொடர்ந்து நகைசுவையா பேசுறீங்க .உங்க பேச்சுதன நாட்ல சிரிப்பா சிரிக்குதே கொஞ்சம் குறைக்க கூடாதா...
பாரிஸ் தயுப் - பாரிஸ்,பிரான்ஸ்
2010-09-26 01:30:00 IST
தலைகீழாக நின்னு தண்ணி குடித்தாலும் மரம் வெட்டி கும்பலுக்கு இப்போ யாரும் கூட்டணிக்கு அழைக்க போவது இல்லை. அதனால் இந்த அனாதை கும்பல் மூன்றாவது அணி என்ற போர்வையில் தெரு முனையில் நின்று வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு ஒப்பாரி வைக்க வேண்டியது தான்...
சாம் - சென்னை,இந்தியா
2010-09-26 01:26:15 IST
ரெடி 1, 2, 3, எல்லோரும் இப்ப ஆரம்பிங்க.. நம்ம லாட் லபக் ராமதாஸ் புலம்ப ஆரம்பிச்சிட்டாரு! அவருக்கு என்ன சொன்னாலும் மண்டையில் எராது!...
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-09-26 01:12:08 IST
அட பாவமே!!!!! எங்க மாமா லபக்கு தாசு நிலைமை இப்டியா ஆகணும், ஒரு காலத்துல கொடி கட்டி பரந்த அவர தெருக் கோடியில நிக்க வச்சிடாங்களே, அந்த காலத்தில சந்தைக்கு போயி மாம்பழம், மாம்பழம் னு கூவி... கூவி... அம்புட்டு பழத்தையும் வித்து காசாக்கி கொழுத்த லாபம் பாத்தவரு , இப்ப என்னடா னா என்னதான் தொண்ட தண்ணி போவ கத்துனாலும் ஒரு பய கிட்ட வர மாட்டேங்குறான். அடிக்கிற மழையில மாம்பழம் போணியாகாம வீணா போயி ஈ மொச்சி நாரி நாசமா போறத பாக்கும் போது எனக்கே நெஞ்சு வலிக்குது. இந்த லட்சனத்துல எங்கிருந்து பலத்தை காமிக்கிறது? அழுகி போன பழத்த வேணா காமிக்கலாம். இந்த ஆள நம்பி எங்க அக்கா ருக்கு மணிய கல்யாணம் பண்ணி கொடுத்தது தப்பா போச்சி, மனுஷன் எப்டியாவது நல்ல படியா வியாபாரம் செஞ்சி எங்க அக்காவ கண் கலங்காம பாத்து பாருன்னு பாத்தா இப்டி நல்ல தேங்கா மாறி கண்ணீர் விட்டு புலம்ப விட்டுட்டாரே! சரி அக்கா கிட்ட பேசி ரொம்ப நாளா ஆச்சே னு நானும் ஆசையா HOT $128 சிங் டெல் ரீசார்ஜ் கார்ட வாங்கி பேசுனேன் பேசுனேன் கடசில கார்டே முடிஞ்சு போச்சி. ஒரே அழுக..... என்னக்கா வியாபாரம் இப்ப எப்டி இருக்கு னு கேட்டேன் அட போடா இந்த ஆள நம்பி நான் வாக்க பட்டதுக்கு பேசாம எங்கயாவது போயி பாழுங் கெணத்துல விழுந்து செத்து போயி இருக்கலாம் னு தேம்பி தேம்பி அழறத பாத்து என்னால அழாம எப்டிங்க இருக்க முடியும். அட மாம்பழ வியாபாரம் தான் சரி பட்டு வரல புண்ணாக்கு வித்தாவது குடும்பத்த காப்பாத்துவாரு னு பாத்தா இந்த ஆமணக்கு ஆளு புடிவாதமா பழ வியாபாரம் தான் பண்ணுவேன் னு ஒத்த காலுல நிக்கிறாரு இந்த கொடுமைய நான் எங்க போயி சொல்லுவேன் ஆண்டவா !!!!...

கருத்துகள் இல்லை: