தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தலைவர்க ளை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச, நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கிடம் கேட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லா தொழிப்பதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நோர்வேயில் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் இயங்குவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
எனவே அவர்களை நோர்வே அரசு எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உலகத் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். இதனடிப்படையில் நோர்வே அரசு தனது அரசியல், புவியியல் எல்லைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் சர்வ தேச வலையமைப்புத் தலைவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண் டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த நோர்வேப் பிரதமர், நோர்வேயில் இயங்குவ தாகக் கூறப்படும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்க ளைத் தமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக