காலிக் கடற்பரப்புக்கு அருகில் உயிராபத்தில் சிக்கி இருந்த சோமாலிய நாட்டு மீனவர்கள் இருவரை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றி உள்ளார்கள்.
இம்மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்து விட்ட நிலையில் இருவரும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தபோது காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள்.
இருவரும் காலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள். மொழிப் பிரச்சினை காரணமாக இந்த இருவர் குறித்த மேலதிக விபரங்கள் எதையும் இலங்கைக் கடற்படையினரால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக