திங்கள், 12 ஜூலை, 2010

பாலா,ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல படம் களவாணி

இங்கிட்டு மீனாட்சி அங்கிட்டு என்று கேட்டு பசங்க படத்தில் கலாய்த்த விமல், இப்போது களவாணி மூலம் தமிழ் [^] சினிமாவுக்கு ஒரு நல்ல ஹீரோ வந்துள்ளதை கிளப்பலாக உணர்த்தியுள்ளார்.

பசுபதி உள்ளிட்ட பல நல்ல கலைஞர்களை திரையுலகுக்குக் கொடுத்த கூத்துப்பட்டறை முகாமிலிருந்து வெளி வந்துள்ள அருமையான புராடக்ட்தான் விமல். பசங்க படத்தில் இவரது அப்பாவித்தனமான நடிப்பு அட்டகாசமாக ஹிட் ஆனது.

அதிலும் செல்போனில் இவர் செய்த சேஷ்டைகள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகின. ரஜினி [^], கமல் பட கேரக்டர்களைப் போல இவரது மீனாட்சிசுந்தரம் கேரக்டரும் சீக்கிரமே பாப்புலரானது.

தற்போது களவாணி படம் மூலம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து இழுத்து விட்டார் விமல். இப்படத்தில் இவர் ஏற்று நடித்த அறிவழகன் கதாபாத்திரம் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலக பிரம்மாக்களையும் கவர்ந்து விட்டதாம்.

பாலா கூப்பிட்டு ரொம்ப நேரம் விமலை பாராட்டித் தள்ளி விட்டாராம். இதுகுறித்து விமல் கூறுகையி்ல், பசங்க வெளியான பிறகு என்னை எல்லோரும் மீனாட்சி சுந்தரம் என்றுதான் கூப்பிட்டார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் அறிவழகா என்கிறார்கள். பெருமையாக இருக்கிறது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல், சசிக்குமார் சார், பாலா சார், பசங்க இயக்குநர் [^] பாண்டிராஜ் சார் என எல்லோருமே என்னைப் பாராட்டுகிறார்கள். அதிலும் பாலா சார் என்னிடம் நீண்ட நேரம் பாராட்டிப் பேசினார்.
ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்தேன் என்று கூறிய பாலா சார், ரொம்ப நேச்சுரலாக நடிக்கிறாய். களவாணி படத்தில் உனது நடிப்பு நடிப்பு போலவே தெரியவில்லை. இதே போல விதம் விதமான கேரக்டர்களில் நடி, உனது நேச்சுரல் நடிப்பை விட்டு விடாதே என்றும் அட்வைஸ் செய்தார். அப்போது ஏற்பட்ட புல்லரிப்பு இன்னும் கூட போகலை பாஸ் என்கிறார் உணர்ச்சிவசப்பட்டு.

கிராமத்து கேரக்டர்களில் மட்டும் நான் பொருந்துவேன் என்று கூற முடியாது. அப்படி ஒரு இமேஜ் வந்து விடாமல் கவனமாக இருக்க விரும்புகிறேன். சென்னை [^] பையனாகவும் கலக்க ஆசை என்கிறார் விமல்.

அடுத்து மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் தூங்கா நகரம் என்ற படத்தில் கண்ணன் என்ற கேரக்டரில் நடிக்கிறாராம் விமல்.

கருத்துகள் இல்லை: