வியாழன், 15 ஜூலை, 2010

மானிப்பாயில் பற்றையை வெட்டியபோது பாரிய பங்கரொன்று கண்டு பிடிப்பு..!

மானிப்பாயில் பற்றையை வெட்டியபோது பாரிய பங்கரொன்று கண்டு பிடிப்பு..!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் பற்றையை வெட்டியபோது பாரிய பங்கரொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் இந்துக்கல்லூரி வீதியில் நீண்டகாலமாகப் பற்றைக்காடாகக் கிடந்த 10 பரப்புக் காணியொன்றை டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் துப்புரவு செய்வதற்காக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர், மானிப்பாய் பிரதேசசபை செயலாளர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர் கள் ஆகியோர் அடங்கிய குழுவொன்று சென்றது. 3 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த சுமார் 300 இலகுவேலைத் திட்ட பயனாளிகள் பற்றைகளை அகற்றிக் கொண்டிருந்த வேளையில் அங்கு பாரிய பங்கரொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நவீனமுறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பங்கருக்குள் வெளவால்கள் குடிகொண்டுள்ளன. இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட பங்கரினைப் பாதுகாப்புப் படையினரும் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை: