திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவிப் பகுதிக்குச் சென்ற தமிழகப் பெண்களிடம் பாலியல் ரீதியாக மகா அசிங்கமாக நடந்து கொண்ட கேரள வனத்துறை அதிகாரிகள் சிக்கியுள்ள வீடியோ குறித்தும், இந்த சம்பவம் குறித்தும் விசாரிக்க சைபர் கிரைம் போலீஸாருக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையும், புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ள அச்சன்கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது, மணலாறு, கும்பாவுருட்டி அருவிகள்.
ஆண்டுக்கு 9 மாதங்கள் இந்த அருவியில் தண்ணீர் வரும். இதனால் கேரள மற்றும் தமிழக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இங்கு வந்து செல்வார்கள்.
கும்பாவுருட்டி அருவிக்கும், ஆரியங்காவு பாலருவிக்கும், தென்மலை எக்கோ டூரிசம் சென்டருக்கும் செல்வதுண்டு.
இதில் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லும் குடும்ப பெண்களை இங்குள்ள வனசம்பரக்ஷன் சமிதி மற்றும் வனத்துறையினர் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் இந்த அருவிக்கு குளிக்க சென்ற பெண்களை இக்கும்பல் மிரட்டி பலாத்காரம் செய்தது. மேலும், ஒரு தாயும், மகளையும் பலாத்காரம் செய்வதையும், காட்டு பகுதியில் நிர்வணமாக ஓடவிடுவதும், அதை கேமரா செல்லில் பதிவு செய்வதும், ஆபாசமாக பேசுவதுமான வீடியோ காட்சிகள் இன்டர்நெட் மூலம் பரவியது.
இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரள சட்டசபையில் கடந்த 2 நாட்களாக பிரச்சனையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து நேற்று சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பதிலளிக்கையில், இதுகுறித்து அதிகாரிகளை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் சட்டசபையில் பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த கொடியேறி பாலகிருஷ்ணன், இந்த வீடியோ காட்சிகள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக