ஞாயிறு, 11 ஜூலை, 2010

பார்ட்டி கொடுத்தபோது தகராறு-நண்பரைக் கொன்று விட்டு படுத்துத் தூங்கியவர் கைது

சென்னை: நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரு நண்பர்கள் மது அருந்தி கொண்டாடினர். அதில் மோதல் [^]ஏற்பட்டு ஒருவர் இன்னொருவரை அடித்துக்கொலை [^] செய்து விட்டார். கொலை செய்து விட்டு போதையில் பிணத்துக்கு அருகே படுத்துத் தூங்கியவரை இன்றுகாலை போலீஸார் தட்டி எழுப்பிக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது நண்பர் பழனி. இவரும் நெருங்கிய நண்பர்களாம். நீண்ட நாட்களாக இருவரும் சந்திக்கவே இல்லை. இந்த நிலையில் நேற்று இருவரும் சந்தித்துள்ளனர். நீண்ட நாட்களாயிற்றே சந்தித்து நண்பா என்று பாச மழை பொழிந்துள்ளனர். பின்னர் மது வாங்கிக் கொண்டு போய் உட்கார்ந்து ஜாலியாக சாப்பிட்டுள்ளனர்.

அப்போது ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து பழனி தலை மீது ஓங்கி அடித்துள்ளார் பாபு. இதில் பழனி மயங்கி கீழே விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார்.

அவர் அடித்ததில் மயங்கி விழுந்து விட்டதாக கருதிய பாபு, அவரை எழுப்பிப் பார்த்தார். ஆனால் பழனி எழுந்திருக்கவில்லை. இதையடுத்து காலையில் எழுப்பிக் கொள்ளலாம் என்று கருதி பழனியின் பிணத்திற்கு அருகிலேயே படுத்துக் கொண்டார் பாபு.

தலையில் ரத்தக் காயத்துடன் ஒருவர் பிணமாகக் கிடப்பதையும், அவருக்கு அருகில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்த அப்பகுதி மக்கள் [^] போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து பாபுவை எழுப்பினர். நடந்தது என்ன என்று அவரிடம் கேட்டபோதுதான் பழனி இறந்து போனது பாபுவுக்குத் தெரிய வந்தது. போதை இனனும் தெளியாமல் இருந்த பாபு, நண்பனைக் கொன்று விட்டேனே என்னையும் உடனே தூக்கில் போடுங்கள் என்று கீழே உருண்டு புரண்டு அழுதார்.

அவரை போலீஸார் கைது செய்து போலீஸ் [^] நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
பதிவு செய்தவர்: TRUTH
பதிவு செய்தது: 11 Jul 2010 5:11 pm
"அவர் அடித்ததில் மயங்கி விழுந்து விட்டதாக கருதிய பாபு,காலையில் எழுப்பிக் கொள்ளலாம் என்று கருதி பிணத்திற்கு அருகிலேயே படுத்துக் கொண்டார்...." ---- இது கொடிய மிருகத்தின் குணம், மது அருந்தியவன் நிலை, இரண்டும் ஒன்றே , பல சாலை விபத்துக்களுக்கும் இந்த மது அருந்தும் பேர்வழிகளே காரணம்

பதிவு செய்தவர்: நல்லவன்
பதிவு செய்தது: 11 Jul 2010 5:04 pm
போடா முண்டம் ! உன் வாழ்கை நாசமா போச்சு

கருத்துகள் இல்லை: