வியாழன், 15 ஜூலை, 2010

குஷ்பு, சுஹாசினி போல எனது வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்-நித்தியானந்தா

சென்னை: நடிகைகள் குஷ்பு, சுஹாசினி வழக்குகளை தள்ளுபடி செய்ததை போல என் மீதான வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமியார் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

என் பக்தை ரஞ்சிதா:

இதுகுறித்து நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,

கடந்த மார்ச் 2ம் தேதி தனியார், டிவி ஒன்றில் என்னையும் என் பக்தையான நடிகை ரஞ்சிதாவையும் இணைத்து, வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மலிவான விளம்பர நோக்கில் பல்வேறு தரப்பினரும், என் மீது பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.

ஒரே பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் மனு தாக்கல் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, நடிகை குஷ்பு மீது ஒரே பிரச்னைக்காக பல்வேறு வழக்குகள் தொடர்ந்த போது, சுட்டிக் காட்டப்பட்டது. மேலும், நடிகை சுகாசினி மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது, அதே சுப்ரீம் கோர்ட் உத்தரவைக் காட்டி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அதை போல, என் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் கார்த்திகேயன் என்பவர், என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் மீது சி.பி.ஐ., உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனு, நடைமுறைக்கு சரியானது அல்ல.

நடிகைகள் குஷ்பு, சுகாசினி வழக்கில் கூறியது போல், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், என்னுடைய கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. எந்த முடிவை எடுத்தாலும், என்னையும் சேர்த்துக் கொண்டு, என் கருத்தை கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார் நித்தியானந்தா.

இந்த மனுவை நீதிபதி வாசுகி விசாரித்தார். பின்னர் நித்தியானந்தா மனுவை ஏற்பதாக கூறிய அவர், இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது நித்யானந்தாவின் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தற்போது, நித்யானந்தா தொடர்பான அனைத்து வழக்குகளும் கர்நாடக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்த வழக்கைத் தவிர, புதுச்சேரி உருளையன்பேட்டையில் மேலும் ஒரு வழக்கு இருக்கிறது.
பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 15 Jul 2010 4:33 pm
குஷ்பூ,சுஹாசினி பல பேர் கூட படுத்தவர்கள்,அனால் உன் கூட பல பேர் படுதிருக்கீரர்கள், ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லை,nee குஷ்பூ, சுஹாசினி இன்னும் பல வேச கூடவும் படுத்திருக்கலாம், யாருக்கு தெரியும்? கதவ திறந்த காத்து வரும்னு சொன்ன, ஆனால் போலீஸ் வந்துடுச்சு,அம்பி என்ன பண்றது நோக்கு புரியுதோ.

கருத்துகள் இல்லை: