இந்தியாவில் முதன் முறையாக, பிறந்து 4நாள் ஆன குழந்தையின் உடல் உறுப்புக்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த, வருவாய்த்துறை ஆய்வாளர் கிஷோர்குமார்-ஆசிரியை ஹேமாவதி தம்பதியருக்கு கடந்த 8ந் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதனால், குழந்தையை இன்கு பேட்டர் கருவியில் வைத்திருந்தனர்.
அந்தக் குழந்தை, 2 நாட்கள் மட்டுமே நலமாக இருந்தது. அதன் பிறகு உடல் நிலை மோசம் அடைந்து, 12-ந்தேதி அன்று அக்குழந்தைக்கு மூளை சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் கிஷோர்குமாரும், ஹேமாவதியும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே அக்குழந்தையின் உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இருந்தன. எனவே, பெற்றோர் மற்றும் உறவினர் சம்மதத்தின் பேரில், அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் பெறும் நிகழ்ச்சிகள் நடந்தன.
அதனைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் இருந்து செகந்திராபாத்தில் உள்ள இன்னோவா ஆஸ்பத்திரிக்கு அக்குழந்தை கொண்டுச் செல்லப்பட்டது.
அங்கு, இதய வால்வுகள் மற்றும் கண்கள் அகற்றப்பட்டு தானமாக வழங்கப்பட்டது. குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட இதய வால்வுகள் வளர்ச்சி அடையாத அல்லது இதய வால்வுகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு பொருத்தப்படும்.
எனவே, தானமாக பெறப்பட்ட இவை மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள், “பிறந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக பெறுவது மிகவும் அரிதானது. ஏனெனில் பிறந்த குழந்தையின் உடல் உறுப்புகள் மிகவும் மெல்லியதாக இருக்கும்.
இவ்வாறு, பிறந்த குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெற்றது இந்தியாவில் இதுவே முதன் முறை ஆகும்” என்றனர்.
மேலும், குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய பெறறோர் மிகவும் போற்றி பாராட்டத்தக்கவர்கள் என்றும், மாருத்துவர்கள் புகழ்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக