வெள்ளி, 16 ஜூலை, 2010

மொத்த சிகிச்சையும் இலவசமm,்25 லட்சத்து 11 ஆயிரத்து 675 பேர்

சென்னை : தமிழக சத்ய சாய் நிறுவனம் சார்பில், சென்னை ராமச்சந்திரா பல்கலையில் நாளை, மருத்துவ சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்கின்றனர்.

சத்ய சாய் நிறுவனம் சார்பில் புட்டபர்த்தியிலும், பெங்களூரு ஒய்ட்பீல்டிலும் பிரமாண்டமாக இரண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் நிறுவப்பட்டு, சேவையாற்றி வருகிறது. இங்கு முதலுதவி முதல், உயர்ரக அறுவை சிகிச்சை வரை அனைத்தும் இலவசம் தான். இம்மருத்துவமனைகள் மூலம், 25 லட்சத்து 11 ஆயிரத்து 675 பேர் பயன் பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 509 பேருக்கு அறுவை சிகிச் சை செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சிகிச்சையும் இலவசம் என்பது எவ்வாறு சாத்தியப்படுகிறது என்பது குறித்தும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை உருவாக்கும் வகையிலும் தமிழக சத்ய சாய் நிறுவனம், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், டாக்டர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கை நாளை நடத்துகிறது.

இதுகுறித்து சத்ய சாய் நிறுவன மாநில தலைவர் ரமணி, கன்வீனர் டாக்டர் மோகன் கூறியதாவது: சத்ய சாய் நிறுவனம், உலகில் எல்லா நாடுகளிலும் உள்ளது. மனித சேவை தான் மகத்தான சேவை என்பதால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. சிகிச்சை, மருந்து என அனைத்தும் இலவசம். சத்ய சாய் அறக்கட்டளை நடத்தும் நான்கு பல்கலைக் கழகங்களிலும், எல்.கே.ஜி., முதல் உயர்கல்வி வரை அனைத்தும் இலவசம் தான். இரு மருத்துவமனைகள் தவிர, நாடு முழுவதும் 768 மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன; 527 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 109 கிராமங்கள் முற்றிலும் தத்தெடுக்கப்பட்டு, குடிநீர், சாலை, பள்ளிகள் என அனைத்து வசதிகளையும் சத்ய சாய் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் 90 மருத்துவமனைகளில், ஒன்று, இரண்டு இலவச பெட்களை ஒதுக்கித் தந்துள்ளனர். சில ஆண்டுகளில் ஆயிரம் இலவச பெட்கள் கிடைத்தால், இரண்டு, மூன்று மருத்துவமனைக்கு சமமாகும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. நவம்பர் 23ல் சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் வருகிறது. ஆண்டு முழுவதும் விழாவாக கொண்டாடுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா ராமன் கூறியதாவது: சத்ய சாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிப்பது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை விளக்கவும், உதவும் மனப்பான்மையை உருவாக்கும் வகையிலும், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், நாளை சிறப்பு கருத்தரங்கை நடத்துகிறோம். இதை மத்திய இணை அமைச்சர் காந்தி செல்வன் துவக்கி வைக்கிறார். சத்ய சாய் நிறுவன மருத்துவ இயக்குனர் சபையா, சத்ய சாய் நிறுவனத்தின் இந்திய தலைவர் சீனிவாசனும் விளக்கமளிக்கின்றனர். திருவேங்கடம், ரங்கபாஷ்யம், உஷா சீனிவாசன், குமாரி உள்ளிட்ட நிபுணர்களும் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை உருவாக்கும் முயற்சி தான் இது. இவ்வாறு கிருஷ்ணா ராமன் கூறினார்.

faiz - colombo,இந்தியா
2010-07-16 10:27:41 IST
பிறருக்கு உதவிசெய்வதற்கு அதிகம் வாய்ப்பு பெற்றவர்கள் மருத்துவர்கள் .இறைவன் அவர்களுக்கு ஈறுலகிலும் அருள்புரியட்டும்....
சங்கர்.ப - தேனி,இந்தியா
2010-07-16 09:33:57 IST
இலவச மருத்துவம் பற்றிய விழுப்புணர்வு நிகழ்சிகளை மாவட்டம் தோறும் வழங்கினால் நன்றாக இருக்கும். ஒண்ணுமில்லாத அரசு காப்பிட்டுத் திட்டத்திற்கே விளம்பரங்களை வாரி இறைத்திருக்குறார்கள். இந்த மாதிரியான முற்றிலும் இலவச மருத்து வசதி பற்றி மேலோட்டமாக மக்களுக்கு தெரிந்திருந்தாலும் அதை பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. சத்திய சாய் நிறுவன சேவைகள் வளர வாழ்த்துக்கள்...
நாகராஜன் - CHENNAI,இந்தியா
2010-07-16 08:19:00 IST
IT IS NICE...
சுந்தர் V A - Bangalore,இந்தியா
2010-07-16 01:27:07 IST

கருத்துகள் இல்லை: