புதன், 14 ஜூலை, 2010

சாரதிகளிடம் லஞ்சம் பெறும் மன்னார் போக்குவரத்து பொலிஸார்!

மன்னாரில் வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸார் தேவையற்ற காரணங்களை கூறி தம்மிடம் லஞ்சம் அறவிடும் செயற்பாடுகள் தற்போது அதிகரித்து வருவதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.மன்னாரில் தற்போது வீதிப் போக்குவரத்து பிரிவு பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் வாகனங்களில் வருபவர்களை இடைமறித்து அவர்களின் ஆவணங்களைப் பரிசோதனை செய்கின்றனர்.சில நேரங்களில் அவர்களது வாகனங்களில் உள்ள ஒரு சில குறைபாடுகளைக் காட்டி 500 ரூபா முதல் 1500 ரூபா வரை லஞ்சமாக பணமாக பெற்றுக் கொள்ளுகின்றனர்.

கருத்துகள் இல்லை: