வெள்ளி, 16 ஜூலை, 2010

வடபகுதி மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் சைக்கிள்கள்

வடபகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கென சுமார் இரண்டு இலட்சம் துவிச்சக்கர வண்டிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளை அமைப்பு மேற்கொண்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு இலட்சம் துவிச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் பயன்படுத்த முடியாத நிலையில் வடபகுதியிலிருந்து மீட்கப் பட்டிருக்கும் சுமார் ஒரு இலட்சம் துவிச்சக்கர வண்டிகளை இத்திட்டத்தின் கீழ் துரிதமாகத் திருத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வடபகுதி பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியளிக்கும் வகையிலேயே இவ்வாறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

கருத்துகள் இல்லை: