வியாழன், 15 ஜூலை, 2010

Cricket top 2009் அதிகம சம்பாதித்த “டாப் 5” வீரர்கள் வருமாறு:-

கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டைவிட விளம்பரத்தில் தான் வருமானம் கொட்டுகிறது.  இந்த தரவரிசையில் விளம்பரங்கள் மூலம் அதிக பணம் சம்பாதித்து வந்தவர் தெண்டுல்கர். தற்போது அவரையே டோனி மிஞ்சிவிட்டார்.
ரித்திஷ் ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் மற்றும் மைண்ட் கேப்ஸ் கார்ப்பரேட் நிறுவனம் டோனியை 3 ஆண்டுக்கு ரூ.210 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு தெண்டுல்கர் 3 ஆண்டுக்கு ரூ.180 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.
இதன் மூலம் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை டோனி பெற்றார்.
டோனி கடந்த ஆண்டில் மட்டும் ரூ.47 கோடி வருவாய் சம்பாதித்து உள்ளார். போர்பஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் டோனி விளம்பரம் மூலம் ரூ.37 கோடியும், விளையாட்டு மூலம் ரூ.9 கோடியும் சம்பாதித்து உள்ளார். அதாவது விளையாட்டு மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட விளம்பரம் மூலம் 4 மடங்கு அதிகமாக கிடைக்கிறது. அதாவது 4:1 விகிதத்தில் உள்ளது.
தெண்டுல்கர் கடந்த ஆண்டில் ரூ.37.6கோடி சம்பாதித்து உள்ளார். தெண்டுல்கர் விளம்பரம் மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க தொடங்கியது 1996-ம் ஆண்டில் தான். மார்க் மாஸ்கரெனஸ் நிறுவனம் 1996-ம் ஆண்டு தெண்டுல்கரை 5 ஆண்டுக்கு ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
கடந்த 20 ஆண்டுகளில் தெண்டுல்கர் விளம்பரம் மூலம் ரூ.500கோடி சம்பாதித்து உள்ளார்.
இதை டோனி விரைவில் எட்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2009-ம் ஆண்டில் அதிக வருமானம் சம்பாதித்த “டாப் 5” வீரர்கள் வருமாறு:-
1. டோனி: ரூ.47 கோடி
முக்கிய ஸ்பான்சர்:- ரீபெக், ஜி.இ.மணி, பெப்சி.
2. தெண்டுல்கர்: ரூ.37.6 கோடி
முக்கிய ஸ்பான்சர்:- அடிடாஸ், சுளோன், ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து.
3. யுவராஜ்சிங்: ரூ.25.8 கோடி
முக்கிய ஸ்பான்சர்:- பியட், ரீபெக், மைக்ரோ சாப்ட்
4. டிராவிட்: ரூ.23.5 கோடி
முக்கிய ஸ்பான்சர்: கேஸ்ட்ரால், ரீபெக்.
5. பிளின்டாப் (இங்கிலாந்து): ரூ.18.8 கோடி
முக்கிய ஸ்பான்சர்: புமா, வோல்க்ஸ்வேசன், பார்லேஸ்.

கருத்துகள் இல்லை: