வியாழன், 15 ஜூலை, 2010

சிதம்பரம் கோவிலில் தீண்டாமையின் அடையாளமாக நந்தன் நடந்த பாதை

சிதம்பரம் கோவிலில் இன்று ஆலைய நுழைவுப் போராட்டம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நடந்து சென்ற பாதை வழியாக இன்று புதன்கிழமை ஆலய நுழைவு நடைபெறவுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆலய நுழைவு போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். சிதம்பரம் கோவிலில் தீண்டாமையின் அடையாளமாக நந்தன் நடந்த பாதை தற்போது அடைக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலை நாட்டும் வகை யிலும் தீண்டாமையின் அடையாளத்தை அகற்றும் வகையிலும் நந்தனார் நடந்து சென்ற அந்த பாதையின் வழியாக பெருந்திரளான மக்கள் புதனன்று ஆலய நுழைவு நடத்திட உள்ளனர். இந்த எழுச்சிமிகு இயக்கத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.பால கிருஷ்ணன், பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை: