சனி, 26 ஜூன், 2010

அறிவாலயம் வந்த சாமிகள், மாமிகள்-வாலி கவிதை

செம்மொழி மாநாட்டில் நேற்று முதல் அரசியல் வாடை அதிகம் வீச ஆரம்பித்துவிட்டது. நேற்று நடந்த கருத்தரங்கு மற்றும் கவியரங்கில் பேசியவர்களும், கவிதை பாடியவர்களும், முதல்வர் கருணாநிதியை வெகுவாகப் பாராட்டிப் பேசினர்.

இந் நிலையில் இன்று நடந்த கவியரங்கில், அதற்குத் தலைமை தாங்கிய கவிஞர் வாலி ஜெயலலிதாவையும், சசிகலாவையும் 'மாமிகள்' என்று சாடி கவிதை பாடினார். தனது கவிதையில் அவர் சொன்னது:

ஆலயம்தானே சாமிகளுக்கான இடம்; சாமிகள் மாறலாமா தடம்;
இதை உணர்ந்து இப்போது அறிவாலயத்தில் வந்து அமர்ந்து கொண்டன முத்துச்சாமி, சின்னச்சாமி எனும் இரு சாமிகள்;
இதற்கு காரணம் இரு மாமிகள்! என்றார்.

மேலும் தமிழ் மாநாட்டை விமர்சிக்கும் சோ ராமசாமியையும் தாக்கினார்.

அது அய்ய நோக்கு அல்ல.. 'அய்யர் நோக்கு':

அதேபோல சோவையும் கடுமையாக சாடினார் வாலி. சோ குறித்து அவர் கூறுகையில்,

''புணைந்தான் அய்யா ஒரு பாட்டு அது செம்மொழி மாநாட்டின் மையநோக்கு.
அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு

ஆனால் என் அருமை நண்பர் சோ’வுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யநோக்கு
அது அய்ய நோக்கு அல்ல.. 'அய்யர் நோக்கு'
அதுவும் வையநோக்கையும் வையும் நோக்கு! என்றார்.

இலையை விட்டு வந்த பூ.. குஷ்பு:

தொடர்ந்து நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தது குறித்து வாலி தனது கவிதையில் கூறுகையில்,

'பூ' ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது.
ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது
அப்பூ... எப்பூ?’’
புடவை கட்டிய பூ! என்றார் வாலி.

முன்னதாக இன்று காலை 10.45க்கு வாலி தலைமையில் கவியரங்கம் தொடங்கியது.

தொடக்கமாக கவிஞர் மு.மேத்தா கவிதை பாடினார். பின்னர் பா.விஜய், பழனி பாரதி, தணிகைச்செல்வன், இளம்பிறை, உமா மகேஸ்வரி, தமிழ்தாசன் ஆகியோரும் கவிதை பாடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: