வெள்ளி, 25 ஜூன், 2010

120 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் மலேசியாவுக்கு தமிழர்கள் சென்றனர

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடை முன்னிட்டு, சர்வதேச அளவில் உள்ள தமிழ்ப்புத்தகங்கள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதற்கென 125 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகில் எங்கும் கிடைக்காத அளவிற்கு இங்கு புத்தகங்கள் குவிந்துள்ளன. பண்பாடு, கலச்சாரங்களை விளக்கும் இந்த புத்தகங்களை, வாங்கி அனைவரும் பயன்பெற வேண்டும்.
இது போன்ற புத்தக கண்காட்சி, கலாச்சார விழாக்கள், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் நடத்த வேண்டும். அவ்வாறு நடத்துவதால், பண்பாடு, கலாச்சாரம் வளர்ச்சி பெறுவதோடு, தமிழ் மொழியும் வளம்பெறும். இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதாக இது அமையும்.

மலேசிய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் பேசியதாவது: சிவகங்கையிலிருந்து 120 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் மலேசியாவுக்கு தமிழர்கள் சென்றனர். மலேசியாவின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்ததால், குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். வளர்ந்து வரும் மொழியாக தமிழ் மொழி உள்ளது. கலத்தில் அழியாத மொழியாக இம்மொழி இருக்க, பல புதுமைகள் வந்தாலும், பழமை மாறாமல் உள்ளது. எனவே, செம்மொழியாக மாற்றம் பெற்றுள்ளது. மலேசியாவில் இன உணர்வுகள் இருந்தாலும், தமிழ் உணர்வு தான் தழைத்தோங்கியுள்ளது. 1970ம் ஆண்டில் முதல் தமிழ் மொழி புத்தகம் மலேசியாவில் வெளி வந்தது. அன்றுமுதல் இன்று வரை தமிழ் அங்கு நிலைபெற்றுள்ளது. மலேசியாவில், 523 பள்ளிகளில் தமிழ் உள்ளன. பள்ளி, பல்கலையில் 8000 தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர். பெரும்பாலான பள்ளி, பல்கலையில் தமிழ் மொழி பாடமாக உள்ளது.  "செம்மொழியான தமிழ்மொழி' பாடலில் பழமை அதிகம் கூறப்பட்டிருந்தலும், இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ப இயற்றப்பட்டு, இசை அமைக்கப்பட்டுள்ளது. கூகுள் இணைய தளத்தில் செம்மொழி மாநாடு குறித்துதேடினால், 95 சதவீதம், செம்மொழி பாடலை பற்றியதாக மட்டுமே உள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சி பெற, இணையத்தளத்தில் பயன்பாட்டிற்கு எளிதாக மாற்றி அமைக்க வேண்டும்.  இவ்வாறு மலேசியா நாட்டு மனித வளத்துறை அமைச்சர் சுப்ரமணியம் பேசினார்.

கருத்துகள் இல்லை: